இரவு மடக்கி வைத்த புத்தத்திற்கு யார் சொல்வார்கள் என் மரணத்தை?
இனிய புத்தகமே!
உன்னை (சு)வாசித்தவன் மரித்துவிட்டான்,
நூலிருக்கும் நடுப்பக்கமே
அவன் வாழ்வின் கடைசி பக்கமோ!
உன் மரணத்தை நான் அந்த
புத்தகத்துக்கு இப்படி சொல்வேன்
"இரவு மடக்கி வைத்த புத்தகத்துக்கு அருகில்
சுயசரிதையாய் மரித்தவன் சரித்திரம்!"
படித்தவன் மரித்தாலும்,
அவன் உடலை எரித்தாலும்,
அவன் மனம் இருக்கும் -
அவன் வாசித்த கடைசி வாக்கியத்தில்!
உன் மரணம் அறிந்தாலும்
உடன் கட்டை ஏறாது!!
கருத்தை சிந்தும் புத்தகம்
உனக்காக கண்ணீர் சிந்தாது!
No comments:
Post a Comment