Friday, December 10, 2010
பேணும் பெண்!
உலகில்
உழைப்பு எப்போதும்
உயர்வுதான்! ஆனால்
உழைப்பவர்கள்
உயர்வது எப்போது!!
இவள் இழுப்பது வண்டியையா?
வாழ்கைகை சக்கரத்தையா?
இந்த மங்கையில் கைகள் மேலோங்கிதான் இருக்கிறது!
ஆனால் அவள் வாழ்க்கையும்
அவள் தலையைப் போல
குனிந்துதான் இருக்கிறது!!
நகச்சாயம் பூசும்
நங்கையர் மத்தியில்
நாட்டை உயர்த்தும்
நங்கையிவள் ஐயமில்லை!!
இவள் நாட்டின்
முதன்மையான பெண்தான்! காரணம்
மூவர்ண கொடியின்
முதல் வண்ணத்தில்
அவளின் ஆடை நிறம்!!
பெண்ணே நீ!
வாழ்விலும் சரி
சாலையிலும் சரி
தனித்தே செல்கிறாய்!!
நீ சிந்திக்காமல்
வியர்வை சிந்துகிறாய்!
நான் உன்னை சிந்தித்து
கண்ணீர் சிந்துகிறேன்!!
Thursday, December 9, 2010
கூண்டுக் கிளிக்கு நேரம் சரியில்லை!
கிளியின் கெஞ்சல் -
இவன் வாசிப்பது
என் சுதந்திர பிரகடனமாக
இருக்க கூடாதா!
கிளியின் பகுத்தறிவும் சுதந்திர ஏக்கமும்-
கடவுள் மேலேதான் இருக்கிறார்
ஆனாலும் பலனேதுமில்லையே!!!
இவன் வாசிப்பது
என் சுதந்திர பிரகடனமாக
இருக்க கூடாதா!
கிளியின் பகுத்தறிவும் சுதந்திர ஏக்கமும்-
கடவுள் மேலேதான் இருக்கிறார்
ஆனாலும் பலனேதுமில்லையே!!!
மரத்துல கூடி கட்டி வாழ்ந்த கிளியை
மரப்பெட்டியே இப்ப சிறை வெச்சிருச்சே!!
மரம் ஒன்னு மரப்பெட்டியாகி செத்துபோச்சு!
மரத்தில் வாழ்ந்த கிளி
இப்போ மரப்பெட்டிக்குள்ள!!!
மரப்பெட்டியே இப்ப சிறை வெச்சிருச்சே!!
மரம் ஒன்னு மரப்பெட்டியாகி செத்துபோச்சு!
மரத்தில் வாழ்ந்த கிளி
இப்போ மரப்பெட்டிக்குள்ள!!!
Tuesday, December 7, 2010
வார்த்தைகள்
புது முயற்சி புரியுதா பாருங்க!!
பஸ் ஸ்டாப் - பார்வை - அவள்
பஸ் - படிக்கட்டு - டிக்கெட்டு
பாட்டு - சத்தம் - செல் நெம்பர்
இரவு - தவிப்பு - அழைப்பு
வருகை - பேச்சு - விடியல்
காலை - மாலை - காதல்
பேச்சு - காசு - போச்சு
கல்லூரி - நண்பர்கள் - சுற்றல்
அப்பா - மாப்பிள்ளை - திருமணம்
நான் - அவள் - அண்ணா நாமம் வாழ்க!!!
Tuesday, November 23, 2010
காதல் வாத்து
அழகு தமிழ்பெண்ணே!
ஆம்! நான் வாத்துதான் -
நீந்துவதற்கு நீராய்
நீ இருக்கும் போது,,,,
"இப்படிக்கு தமிழ்குலத்து வாத்து"
ஆம்! நான் வாத்துதான் -
நீந்துவதற்கு நீராய்
நீ இருக்கும் போது,,,,
"இப்படிக்கு தமிழ்குலத்து வாத்து"
Sunday, November 21, 2010
உலகநாயகனுக்காக நான் உதிர்த்த வார்த்தைகள்!
புதுமை விரும்பி இவர்!
இன்றைய திரையுலகின் இளைய நாயகர்!
யாருக்கும் இல்லை இவரின் பவர்!
திறனமயின் சீனப் பெருஞ்சுவர்!
இவரை வெல்ல NO NO NEVER!
இன்றைய திரையுலகின் இளைய நாயகர்!
யாருக்கும் இல்லை இவரின் பவர்!
திறனமயின் சீனப் பெருஞ்சுவர்!
இவரை வெல்ல NO NO NEVER!
Friday, November 19, 2010
படித்த புத்தகமும்! படித்தவன் மரணமும்!!
இரவு மடக்கி வைத்த புத்தத்திற்கு யார் சொல்வார்கள் என் மரணத்தை?
இனிய புத்தகமே!
உன்னை (சு)வாசித்தவன் மரித்துவிட்டான்,
நூலிருக்கும் நடுப்பக்கமே
அவன் வாழ்வின் கடைசி பக்கமோ!
உன் மரணத்தை நான் அந்த
புத்தகத்துக்கு இப்படி சொல்வேன்
"இரவு மடக்கி வைத்த புத்தகத்துக்கு அருகில்
சுயசரிதையாய் மரித்தவன் சரித்திரம்!"
படித்தவன் மரித்தாலும்,
அவன் உடலை எரித்தாலும்,
அவன் மனம் இருக்கும் -
அவன் வாசித்த கடைசி வாக்கியத்தில்!
உன் மரணம் அறிந்தாலும்
உடன் கட்டை ஏறாது!!
கருத்தை சிந்தும் புத்தகம்
உனக்காக கண்ணீர் சிந்தாது!
இனிய புத்தகமே!
உன்னை (சு)வாசித்தவன் மரித்துவிட்டான்,
நூலிருக்கும் நடுப்பக்கமே
அவன் வாழ்வின் கடைசி பக்கமோ!
உன் மரணத்தை நான் அந்த
புத்தகத்துக்கு இப்படி சொல்வேன்
"இரவு மடக்கி வைத்த புத்தகத்துக்கு அருகில்
சுயசரிதையாய் மரித்தவன் சரித்திரம்!"
படித்தவன் மரித்தாலும்,
அவன் உடலை எரித்தாலும்,
அவன் மனம் இருக்கும் -
அவன் வாசித்த கடைசி வாக்கியத்தில்!
உன் மரணம் அறிந்தாலும்
உடன் கட்டை ஏறாது!!
கருத்தை சிந்தும் புத்தகம்
உனக்காக கண்ணீர் சிந்தாது!
Sunday, September 26, 2010
இரந்து வாழ்தல் இழிவு
வாரத்தின் முதல் நாளான இன்று பேருந்தை பிடிக்கும் அவசரத்தில் நான் முகம் வழித்து அவதியாய் குளித்து அந்த பேருந்தை அடைந்தேன். இருக்கையில் இடமில்லை, அனைத்து இருக்கையிலும, அமர்ந்து வேலை பார்க்கும் அலுவலகப் பணியாளர்கள். சேறு மிதிக்கும் கால்கள் நின்று கொண்டிருந்தன. கதிரறுக்கும் கைகள் கம்பியை பிடித்திருந்தன. நானும் ஏறிச்சென்று "திருடர்கள் ஜாக்கிரதை" பகுதியில் (ஆண்கள் பகுதிதான்) இருக்கை இல்லாததால் இடிபாடுகளுக்கிடையே நின்றுகொன்டேன். நான் பயணித்த பேருந்தை பார்த்த போதுதான் என்னைப்போல பேருந்தும் வறுமைக்கோட்டுக்கு கீழே என்பதை உணர்ந்தேன்.
அப்போது ஒரு கிராமத்தில் பேருந்து நின்றது. சில நொடிகள்-சில பயணிகள், அதில் ஒரு பெண் கைக்குழந்தையோடும், இன்னொரு கையில் ஒரு சிறுவனோடும் ஏறினாள். அருகில் அமர்ந்திருந்த ஆண்கள் அப்பெண் "இருக்கையை கேட்பாளோ" என ஓரக்கண்ணால் பார்த்து தலைகுனிந்தனர். ஆனால் பெண்ணின் வலியறிந்த மற்ற பெண்களோ, இப்பெண்ணை பார்த்ததும் முகத்தை எதிர்திசையில் திருப்பிக் கொண்டனர். ஆனால் அந்த தாயோ யாரிடமும் எதையும் எதிர்பாராதவளாய் குழந்தைகளை இறுகப் பற்றி பயணத்தை தொடர்ந்தாள்.
தனக்கு மானமுண்டு என பிதற்றும் இவர்களின் மனிதாபிமானம் எங்கே? இந்த பெருமை பீத்தகலயன்கள் தன்னை தங்கமாய் நினைக்கும் பித்தளைகள் என்பதில் எனக்கு ஐயமில்லை. இப்படி என் தசைகளனைத்தும் வசைபாடும்போது - அந்த சிறுவனைப் பார்த்தேன், பேருந்தின் வேகத்தையும் ,. நகரும் மரங்களையும், தான் இடம்பெயர்ந்து செல்லும் அறிவியலையும் கண்டு ஆச்சரியத்தோடு பயணித்துக்கொண்டிருந்தான். அந்த குழந்தைகளை அழகுபடுத்திய அந்த தாய் தான் பொட்டு வைப்பதையும் மறந்திருந்தாள், இருந்தும் அவளின் முகத்தை தாய்மை அழகுபடுத்தியிருந்தது.
இருக்கையை எதிர்பாராமல் பயணம் செய்யும் அவள் தன் குழந்தைகளுக்கு "யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் வாழ் - இரந்து வாழ்தல் இழிவு" என மறைமுகமாய் உணர்த்துவதாய் நான் நினைத்தேன். அது உண்மை என்பதை உணர்த்தும் வகையில் சுயநல இருக்கையில் மானத்தோடு (மனிதாபிமானத்தை தவிர) அமர்ந்திருக்கும் மொக்கைகளை பார்த்து பொக்கை வாயில் சிரித்தது, தாயின் இடுப்பில் இருக்கை கொண்ட கைக்குழந்தை.
Subscribe to:
Posts (Atom)

