Wednesday, June 29, 2011

வனமும் அழகு ரசிக்கும் மனமும் அழகு!


நீ இருக்கும் வனம் அழகு - உனை
பார்த்தாலே மனம் அழகு!
பறவையில் நீ அழகு - கருமேகம்
வரும்போது ஆடல் மிக அழகு!
---------------------------------------
உடலில் நிறம் பல கொண்டாலும்
கருநிறம் கண்டாய் வானத்திலே!
தோகை விரித்து ஆடிக் களித்து
அழகை குடிவைத்தாய் வனத்திலே!
---------------------------------------
சிறுஉணவு நீ தின்று
பேரழகு கொண்டதென்ன!
பீலியின் சிறு அசைவில்
காண்போரை கொன்றதென்ன!
-----------------------------------------
அகிலத்தை அழகினால் வென்றாயே
தேசத்தின் பறவையாய் நின்றாயே!

Tuesday, June 28, 2011

காந்தியும் காக்கையும்!


கோலெடுத்தால் காக்கைகள் மிரண்டோடும்
ஆனாலும்
இவர் அகிம்சா என காக்கையும் அறிந்ததோ?
அதனால் அடைக்கலம் புகுந்ததோ?


மனுசனுக்கு இடமில்ல
தரையில வீடுகட்ட!

அதனால் எனக்கும்
மரமில்ல கூடுகட்ட!

மேல் சட்ட போடாம
மேதாவி ஆகிபுட்ட!

அகிம்சா கொண்டுதான்
அகிலத்த காத்துபுட்ட!

ஒரே விழிதான் உண்டெனக்கு
உலகத்த நான் பாக்க

ஒரே வார்த்தைதான் நீ சொன்ன
உலகத்த நீ காக்க!
அகிம்சா!!!


ஓ...ஓ...ஓ...

ஓநாய் - தூங்காத காதலர்களாய்
ஓடும் நிலா - அவர்களின் தூதுவனாய்
ஓங்கிய மரங்கள் - வேர்விட்டு நிலைபெற்ற காதலாய்!

காதல் கருத்தோடமைந்த
கருப்பு வெள்ளைப்படமோ? இது!!

கறைகள் பல இருந்தாலும்
காதலர்க்கு அது வெண்ணிலாதான்!

உண்ட மயக்கம்! (உண்டது காதலை)


மதியம் உண்டவுடன்
சில வரிகள் மனதில் உதயம்!
வெற்றிலை பாக்கை போல!

உனக்காய் எத்தனை வரிகள்
....கிறுக்கியிருப்பேன்! - நான்!

நீ ஒரு முறையேனும்
முயன்றதில்லையா? என்றேன்!

உன் முகத்தில் நாணம் உதித்தது
என் யுகத்தில் எல்லாம் தோற்றது!
என் பார்வைக் கோணம் அறிந்ததும்
முகத்தில் நாணம் நிரப்பினாய்!

-------------------------------------------------

அதுவே கவிதையாய்
என் பக்கத்தை நிரப்புகிறது!
-------------------------------------------------
ஆம்
காதல் வந்தால்
பசி இருக்காது என்றார்கள்!
வயிற்றின் பசி தெரிவதில்லை
மனதின் பசி தீர்வதில்லை! என்ன செய்ய!

-------------------------------------------------
ஒ அந்த தேவதை யாரோ ?:)
இந்த மண்ணில் இருக்கிறாள்
என் கண்ணில் இல்லை - காரணம்
என் கண்கள் இன்னும் காணவில்லை
அதனால் நான் கண்டதில்லை
காதலின் எல்லை!
-------------------------------------------------
எல்லாம் கேள்வி ஞானம் மட்டும் !
உண்மைக் காதலை
உள்மனம் உணர்ந்தால்
என் கவியில் நிச்சயம் தேன் சொட்டும்!

-------------------------------------------------
காதல் மீன்தான்
அது கிடைக்கும் வரை
வாழ்வு வீண்தான்!

ஓர் இதழாய் நான்!


உறவுகள் எல்லாம் உதிர்ந்தாலும்
உன்னைக் காக்கும் ஓர் இதழாய் நான்!



உன்னோடு
உன்னத உறவுண்டு !

பருக காதல் தேனுண்டு!

பரிசுத்த "வெண்" காதலை
மெய்பிக்கும் "கரு"வண்டு !

Monday, June 27, 2011

வேகத்தடை

வேகத்தடையை வெறுக்கிறேன் பொதுவாய்
இப்போது விரும்பி போகிறேன் மெதுவாய்
நீ பஸ்ஸ்டாப்பில் நிற்கும்போது!


ஒரு வேகத்தடையை கடந்து வந்தபோது தோன்றியது!

மன்னிப்பு

பூ ஒன்று மற்றொரு பூவை
பூக்கவைக்கும் அது மன்னிப்பு!
பூப்பது அன்பு!

இந்த வார்த்தை

இடைமறிக்க முடியாத ஒரே இடம்
என் தாயிடம்!

Thursday, June 23, 2011

காதலி(யி)ன் பேச்சு!

காதல்கலை தாயே!
கண்டதும் வாழ்வை கலைத்தாயே!
-------------------------------------------
நீ எந்த மொழியில் பேசினாலும்
எனக்கு அது காதல் மொழி!
-------------------------------------------
நீ பேசும் வார்த்தைக்கு பொருள் எதற்கு
நீ என்னுடன் பேசினாலே
"காதல்" என்று பொருள் எனக்கு!
-------------------------------------------
விழியால் பேசி இதயம் தொட்டவள் நீ!
இதழால் பேசினால் என்னாகுமோ?
-------------------------------------------
உன் வண்ண ஆடை வளைந்தாடும்போதும்
உன் கரும்சிகை காற்றில் பறக்கும்போதும்
விழியின் இமைகள் தொட்டுக்கொள்ளும்போதும்
காலணியின் ஓசை காதைத் தொடும்போதும்
நீ என்னுடன் பேசுவதாய் நினைவு எனக்கு!
-------------------------------------------
நீ பேசும்போது கண்டபடி சுழல்கிறது
என் மனம் - உன் நாவைப் போல்!
-------------------------------------------
நீ பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை
ஏனெனில் உன் பேச்சழகில் என்
எதிர்கேள்விகள் எல்லாம் இறந்துவிடுகின்றன!
-------------------------------------------

சந்தோச"டே" தான் சன்டே!


அரிபரியா ஆறு நாளும் வேலதான்
அமைதியா ஒரு நாளும் தேவதான்!
.
ஆறு நாளா சம்பாதிச்ச
காசெல்லாம் சந்தோசமா கரையுது!
.
மத்த நாளு டென்சன் பிபி டார்கெட்டு எகிறுது
ஒத்த நாளில் குடும்பத்தோட மனசு நிறையுது!
.
புதுசா நடக்கும் புள்ளபோல
ஆறுநாளும் போகுது!
.
சன்டே மட்டும் பத்த வச்ச
சரவெடிபோல சரசரன்னு வெடிக்குது!
,
இந்த வீக்எண்ட நம்பித்தான்
வீக்கே இங்க பொறக்குது!
.
வீக்எண்ட்னு சொன்னாலும்
இது வாரத்துல முதநாள்தான்!
.

வீக்குக்கு இது எண்டு
ஹேப்பிக்கு இது பிகினிங்தான்!
.

ஆறு நாளும் வாக்கிங்தான்
வீக் எண்ட்னா பிக்னிக்தான்!

Monday, June 20, 2011

காதல் மரமா​னேன்!


ஓ மரப்பெண்ணே!
உன் உள்ளம் அரிக்கும்
கரையானாய் என் காதல்!


ஆம் சரிதான்!
காதல் உன்னை துளிர்க்க வைக்கும்
உன்னை தழுவும் கிளையாய்

நான் இருக்கும்போது!


சில புகைப்படம்
மிக பொருள்படும்!
ஆனால் இது
மிக்க பொருள்படும் ஒரு புகைப்படம்!


மழை என்றால்
வேரில் சேர்வேன்!
கிளை என்றால்
வாழ்வில் சேர்வேன்!


மரத்தில் பெயர் எழுதும் காதலர்கள்
மத்தியில் இங்கு நிற்கிறது
மரமே காதலாய்!
என் காதலியாய்!




காதல் எங்கு இருக்கிறது என்று கேட்டேன் உன்னிடம்!

நீ சொன்னாய் ,,,,,
மலரில் மணமாய்
வேரில் நீராய்
இலையில் நிறமாய்
உணவாகும் ஒளியாய்
உன் காதல் என்றாய்!

அனைத்தும் உணந்தேன்
எனினும் காதலை
காணவில்லை கண்ணில்!
நான் பூத்துக்குலுங்கும்போது
நீ தொட்ட மரம்!
நான் இலைஉதிர்ந்து காயும்போது
காதல் பட்ட மரம்!

வீட்டுக்கு ஒரு மரம் வேண்டும்!
இவள் போன்று காதலியாய்!
பசுமையாகும் உலகும்
நம் உள்ளமும்!