Wednesday, February 29, 2012

இசைப்பாடல் முதல் முயற்சியாய்..

நாயகன் பிகரப்பத்தி பிரண்டுகிட்ட சொல்றமாதிரி ஒரு பாட்டு

(தந்நா தந்நா தந்நநநந்நா)

அம்போ அம்போ இவ மன்மத அம்போ 
அம்போ அம்போ இனிஆம்பள அம்போ

(தநா தநநநா தநா தநநநா) 

முறுக்குன மீசையெல்லாம் உடைஞ்சிடுமேடா
கல்மனசும் ஐஸ்கிரிமா கரைஞ்சிடுமேடா
இவஅழகு மழைபேஞ்ச மன்மதகாடா
வரிசகட்டி கூட்டம் நிக்கும் சீக்கிரம்போடா

அழகிப்போட்டிக்கு அம்பயரும் அவதான்டா
ஆயிரம் அணுஉலைய எம்மனசில் வச்சாடா
ஆம்பளங்க கற்பயெல்லாம் பார்வையில எரிச்சாடா
நமக்கு அயோத்தி அவவாழும் இடந்தாண்டா

அம்போ அம்போ இவ மன்மத அம்போ 
அம்போ அம்போ இனிஆம்பள அம்போ

அதுஇது எதுவும் அழகுக்கு ஒப்பில்லடா
அவஇல்லா என்வாழ்க்கை உப்பில்லடா
எல்லாம் செஞ்சும் என்உடம்பில் உசுரில்லடா
மழைபேஞ்சி உழுதுபோட்டும் விதையில்லடா

என்ன செஞ்சேன் என்ன செஞ்சேன்
என்ன செஞ்சேன் நாளும் பொழுதும்
காதல் தவிர வேறற என்ன செஞ்சேன்

வாயக்கட்டி வயித்தக்கட்டி வளத்தாங்கடா
வயசுவந்த வாலிபத் பாத்துநானும் சாஞ்சேனடா
சாஞ்சு சாஞ்சு நானும் செத்தேனடா
காதலால காதலால தினம் இத்தேனடா

பொழப்பே இருட்டாச்சு எங்கயுமே கரண்டில்ல
அவளப் பாத்தாக்க கரண்ட்டு மனசுக்குள்ள
பாக்கும் பசங்களுக்கு ஆசஒண்ணு நெஞ்சுகுள்ள
உன்ன கட்டிக்கணும் வேற என்ன சொல்ல

அம்போ அம்போ இவ மன்மத அம்போ 
அம்போ அம்போ இனிஆம்பள அம்போ 

இடைஞ்சல்

பேருந்து ஓட்டுநரும்
பேரன்பு நண்பரும்
பேசிய பேச்சில்
பயணிகள் கொதிப்போடு
வேகம் தவிர்த்து
அமைதி பெற்ற எஞ்சின்... 

காலம் தவறி அலுவலகம் 
காரணமாய் பேருந்து 
கடுப்போடு நான்

காதல் பெரிது

தென்றல் உன்முகம் தொடும்போது
சிறுமுடி ஆடுமே செவிமீது
அழகிய மேனியில் நானென்று
உன்ஆடையும் நாணுதே எனைக்கண்டு
சிறுசிறு அசைவை பெரிதாய் ரசித்தேன் இப்போது
உலகில்பெரிது என்காதலென 
உன்னிடம் சொல்வது எப்போது...

என்னோடு நீ பேசு

என்னோடு மட்டும் நீ பேசு
உன் மன சன்னல்களை
என்னால் திறக்க முடியும் பேசு
என்னோடு மட்டும் நீ பேசு...

மெல்லிய மனதிலே வல்லிய கோபமா?
காலங்கள் கடந்த கருத்து சொன்னதால் சாபமா?
சீ ச்சீ என்போரிடம் புரட்சியாய் பேசியது பாவமா?
என்னோடு மட்டும் நீ பேசு

திறந்தே இருக்கினறன
உனக்காய் காதுகளும்
மனதும்....

வாழ்வின் வேர்

துயரம் என்பது நோயல்ல 
விழிநீர் வந்தால் தவறல்ல
உலகம் உன்பேர் சொல்ல
வாழ்வை இனிதாய்நீ வெல்ல
துயரம் என்பது நீர்தானே
துளிதுளியாய் விழும்போது
வளரும் வாழ்வின் வேர்தானே..

கருவறைக்காலம்

கோயிலில் கடவுள் 
இருக்குமிடம் கருவறையாமே!
அடக் கடவுளே...
கருவறைக்காலம் எத்தனை நாளோ?
எப்போது நீ உலகில் பிறப்பெடுப்பாய்
ஏழைகளின் நீங்கா துயரறுப்பாய்?
பிரார்த்திக்கிறேன் நீ 
பிறப்பெடுக்க...

காதல் படுத்தும் பாடு

இருபது ரூபாய் மருந்தை
இன்சக்சன் போட ஒரு நூறு
ஆட்டோவுக்கா? வண்டில விடேன்டா
- அம்மா

பைவ் மினிட்ஸ் வாக்கபுள் 
டு ஹோம் பிரம் ஆபிஸ்
நடந்துட்டே 5 நிமிசம் பேச 
30கிலோ மீட்டர் வந்தியாடா?
- அவள்

ஆறு நிமிடம் செல் பேசியபின்
அம்மாவிடம் "வச்சிடறேன்"

ஆறு மணிநேரம்
அவளிடம் பேசியபின்
"வக்கனுமா" கெஞ்சினேன்
அவளிடம் காலை
ஆறுமணிக்கு!

Monday, February 27, 2012

பிறவா கனவுகள்


மத்தாப்புகள் எப்போதும்
வண்ணமயம்தான் மருந்திட்ட
பிஞ்சுகளின் கனவுகள் போல்...
---- ----- ------
விதையின் சார்பிழிந்து
விருட்சம் வளர்க்கும்
சில முதலாளிகள்
---- ----- ------
இவர்கள் வாழ்வின் ஆதாரம்
அழித்தது பொளாதாரமோ?
இந்தியா வல்லராசாகும்
இவர்கள் கனவுகள் சாகுமா?
---- ----- ------
பெற்றோர்கள்...
கதிருக்கு காத்திராமல்
விதை நெல் விற்றவர்கள்
---- ----- ------
ஏன் இவர்கள்?
பணத்தாசை பெற்றோரா?
பாதை மாறிய குழந்தைகளா?
---- ----- ------
மரம் தந்த விதையே
மரத்துக்கு இரையோ?
---- ----- ------
தூய்மையானதுதான்
குழந்தைகள் உள்ளமும்
உணவகத்தின் மேசையும்

Thursday, February 16, 2012

தலையணைகள்....

இன்பக்காதலின்
இனிய நினைவுகள்
இறுக நிரம்பிய
இளம் நெஞ்சுமூட்டையின்
இதயத்துடிப்புகள் உணர்ந்த
பஞ்சுமூட்டைகள்தாம்
தலையணைகள்....

காதலர் தினம்


இன்று,
வாழ்த்து அட்டைகள்
குடும்ப அட்டைகளாக
வாய்ப்பு...

இன்று,
அணுக்கதிரின் அபாயம்
அறியாது புது மின்சாரம்
மனதில் பிறக்கும்...

இன்று,
மூளையில் பல்பு எரிய
மின்தடை இல்லை...

இன்று,
வாழ்த்து அட்டையிலும்
சிகப்பு ரோசாவிலும்
சில உயிர்கள்...

இன்று,
ஒவ்வொரு பரிசும்
தாஜ்மகால்தான்...

இன்று,
தூண்டில்கள்
புதிதோ பழையதோ
காத்திருக்கும்மீன்களுக்காக...

இன்று,
சட்டசபையில் விழிசிவந்து
விரல்நீட்டும் அளவு தைரியம்
காதல் சொல்வோர்க்கு...

இன்று,
அதிஷ்டம் அவசியம்
ஆண்களுக்கு, பெண்களுக்கல்ல...

இன்று,
வாழ்த்து அட்டைகிழியும்போதே
கிழியும்சிலரது இதயம்...

இன்று,
கூடும்
இதயங்களும்
பீச் பார்க்கின் வருகை பதிவும்...

இன்று,
அறிவுக்கும்
அறிவியலுக்கும்
ஆண்கர்வத்துக்கும் விடுமுறை...

இன்று,
ஆறாய் இன்பம்
ஆறாத துன்பம்
இரண்டில் ஒன்று...

இன்று,
அசட்டு புன்னகையால்
பெண்களுக்கு பூக்கள்
பிடிக்காது போகலாம்...

இன்று,
கால் கட்டைவிரலால்
பூமியில் அதிக பள்ளங்கள்...

இன்று,
நண்பர்களுக்கு நல்ல நாள்
முடிவு யாதெனினும் பார்ட்டி...

                                  - சந்துரு

குடி


விடலையில் கற்றதால்
விடமுடியாமல் பலர்
----      -----     -----    -----
கணுகணுவாய் வளர்ந்தது
அணுஅணுவாய் கொல்கிறது
----      -----     -----    -----
விழிப்புணர்ச்சி கூடாதென
மக்கள் விழிமூட அரசின் சதியோ?
----      -----     -----    -----
தினக்கூலிகள்
தினமும் பலி...
----      -----     -----    -----
வீட்டு வாயிலில் தடுமாற்றம்
அறுந்தன உறவுகள்
திரைச்சீலையோடு சேர்ந்து
-----      -----     -----    -----
நல்லதோ கெட்டதோ
நான்கு பீர்பாட்டில் மூடிகள் மிஞ்சும்
----      -----     -----    -----
அய்யனாரும்கருப்பனாரும்
மூடிகள் திறந்ததில்லை
பூசாரிகள்தான்...
----      -----     -----    -----
"மச்சி பீர் கூட இல்லையாடா"
நல்ல நண்பனின்
நயமான தூண்டல்..
----      -----     -----    -----
தளரும்
நரம்பும் வாழ்வும்
வளரும்
அரசும் முறுக்குகாரனும்
----      -----     -----    -----
ரேசன் கடையில்
"சரக்கு வரல"
மதுபானக் கடையில்
"சரக்கு இல்ல"
அடிக்கடி ஒலிக்கும் வார்த்தைகள்
----      -----     -----    -----
இளமையில் பழகிப்போகும்
முதுமையில் அழுகிப்போகும்
----      -----     -----    -----
பழக பழக
பாலும் புளிக்கும்
இப்பழக்கம் அல்ல
----      -----     -----    -----

Saturday, February 11, 2012

வாழ்க்க அச்சாணி

நாஒரு கருவாயன்
வூட்டுகாரி கருவாச்சி
கிளிகொத்தும் பழமாட்டம்
என்கிருக்கா ஒருபுள்ள!

உலகமே தொறந்திருந்தும் 
இங்கவந்து ஏன்பொறந்த
தண்ணியில்லா ஊருக்குள்ள
தாமரையா நீயிருந்த!

மண்வெட்டி தேஞ்சிருச்சு
மாடுரெண்டும் செத்திருச்சு
ராணியாட்டம் வாழவக்கும்
எண்ணமட்டும் சாகலியே!

தண்ணியில்லா விளைச்சலுக்கு
விஞ்ஞானம் வளரவில்ல
மக தாவணி போட்டபுள்ள
தாலிவாங்க காசுமில்ல!

புலம்பியே என்வாழ்க்கை
புத்துகட்டி போயிருச்சே
கஷ்டமெல்லாம் ஒண்ணுகூடி
கூத்துகட்டி ஆடிருச்சே!

பாராதிராசா படத்தோட
மயிலுக்கே சப்பாணிதான்
என்வாழ்க்க ஓடுனாலும்
இல்லையம்மா அச்சாணிதான்! 

இதுதான் விதியோ,,,

சுற்றிலும் மலர்கள்
சூழ்ந்த சொந்தங்கள்
பெருமை பேச்சுக்கள்
ஆறுதல் வார்த்தைகள்
வேண்டிய உதவிகள்
வாழும்போது இல்லையே
இதுபோல..

உன் நினைவு


நான் தனிமையில் தாழிடும்
போதெல்லாம்..
சத்தமின்றி தனிமையுடைத்து
உள்ளே நுழையுதடி 
உன் நினைவு,,,
-------------------------------------------------------------------------------------------------
இதயம் துடிப்பதே காதல் உள்ளதால்
கனவு கொடுப்பதே நினைவு கொல்வதால்...
இரண்டும் வேண்டுமே மீண்டும் மீண்டுமே
இனி என் வாழ்விற்கு இவையிரண்டும் போதுமே
-------------------------------------------------------------------------------------------------
மெளனம் என்பது இதழில் அமைதி
வார்த்தை பிறந்தால் காதலில் நிம்மதி
உன் இதயம் தந்துநீ உடனே சம்மதி....
-------------------------------------------------------------------------------------------------
காதலை சொல்ல வார்த்தைகள் இல்லையா
காதல் செய்வோர்க்கு மிக்க தொல்லையா
வார்த்தை வந்தால் உயிர் வாழ்வேனில்லையா
மூடிய இதழாலே என் வாழ்வும் முடியுமோ?
-------------------------------------------------------------------------------------------------
காதலித்தபோது
தேனீர் குடிக்கும்போதும் 
தேவதையின் நினைவுதான்!

காதல் யித்தபோது
தண்ணீர்கலக்காமல் தண்ணியடித்தேன் 
தனிமையில்நான்!
-------------------------------------------------------------------------------------------------


லவ் டுடே...

==================
சைடு மிர்ரரில் ஸ்கூட்டி
180cc வண்டி 30KMPH
அருகருகே பார்க்கிங்
காபி ஷாப்பில்....
====================

பெண் போலீஸ்(க்கு) பாதுகாப்பு

---------------------------------------
பணி நேரம் முடிந்து
அப்பாவுக்கு அழைப்பு
வீடு செல்ல காத்திருப்பு
அறைசென்றதும் ஆணியில்
காக்கிசட்டை
-----------------------------------

Wednesday, February 8, 2012

அவள் விழிகள்....

அவள் விழிகள் செய்த கள்ளத்தனம்
அவள் பின்னால் அலைகிறேன் தினம்தினம்
இதயம் திருப்பித் தராத வில்லத்தனம்
என் வாழ்வில் இன்பமில்லை தினம்தினம்!

வாரத்தின் முதல்நாள் மகிழ்ச்சியோடு 
வேலை தொடங்குது வணக்கத்தோடு!

தனிமை உடை

தனிமை உடைக்கும் ஒரு வார்த்தைக்காய்
எத்தனை உதிர வார்த்தைகள் உதிர்த்தாய்!

நீ என்னருக்கில் இருக்கும்போது 
உன் தனிமை உடைவதை நானறிவேன்!

ஆம் உனக்காய் நானிருப்பேன் மரமாக
மரத்தடியில் நீ வந்தால் உனக்காய் 
இலையுதிர்ப்பேன் அழகாக!

குடியாய் குடி....

குடியாய் குடிக்கிறார்கள்
குடும்பமாய் அழுகிறார்கள்...............

காலையில் வெயிலானாலும்
காதலில் பெயிலானாலும்
பள்ளியில் பயில்பவனானாலும்
படுக்கையின் கிழடானாலும்
போதை வேண்டுமே பொழுதெல்லாம்
இது மாறாது நாம் அழுதெல்லாம்,,,,


ஆம் குடிதான் சிரிக்கிறது
அதனால் பல குடிகள் அழுகிறதே,,
அரசுக்கு கோடிகள் குவிகிறது
அதனால் இலவசங்கள் தருகிறதே,,
அடிக்கடி பார்ட்டிகள் வருகிறது
மொக்கை காரணங்கள் முளைக்கிறதே,,

தமிழகம் தற்போது போதும் போதும்.........


தமிழகம் ஒளிருமே பலநிலையிலே
எனினும் மின்தடை ஒளியில்லே
மக்கள் மனமோ அமைதியிலே
அதை தவிர வேறுவழியுமில்லே!

கூலிவேலை முடியும் மாலையிலே
கணவர்கள் மூழ்குவர் குடியிலே
வந்ததும் சரிவார் மனைவிமடியிநிலே
பிள்ளைகள் ஆடுவர் வீதியிலே
அவர் வாழ்வு முடியுமே பாதியிலே!

ஆறே மாதத்தில் மின்தடைக்கு
தடையென்றார் தேர்தல் உரையினிலே!
ஆறே மாதத்தில் அனைவருக்கும்
மந்திரி பதவி அளித்தார் அவையிலே!

அணுஉலை கிடக்கு கிடப்பினிலே
அரசோ ஆதரவுமறுக்குது கடுப்பினிலே!
அரசுப்பேருந்து விபத்தென்றால்
உயிரிழப்போ மிகக்குறைவாம் காரணம்
பயணிகள் யாருமில்லே யாருமில்லே!
 

சுமை

இடுப்பில் ஓராடை மட்டுமிருந்தால் 
இன்பம் நிம்மதி இரண்டும்தானே!
மாற்றுத்துணி ஒன்று வேண்டுமென்று
மனம் நினைக்கும்போதே சுமைதானே!


மனதை திற
ஆசைகள் துற
நிம்மதியாய் பற!

உன் காதல்!

நேரம் தின்னும் வேலை 
நடுவே எப்போதும் என் 
இதயம் தின்னும் உன் காதல்!


பொருள்தேடும் துன்பங்கள்
அனைத்து அழித்த ஒர் துளி
உன் காதல்!

என் தாய் ,,,

தாளாத வலிபொறுத்து
தவமிருந்து என்னைபெத்த
தப்பு பல செஞ்சாலும் 
தாயன்பா தட்டிக்குடுத்த

மனைவின்னு ஒரு பொண்ணு
வாழ்க்கைல வந்தாலும்
தாயாத்தான் நினைச்சேனே
காதலியா நினைக்கலியே....

தாட்சணை இல்லா வரதட்சணை!



புத்தகத்துக்கு பணம் இல்லையென்று
மகளிடம் சொன்னேன் பொய்யொன்று 
நகைசீட்டு போட்டேன் அவளுக்காக!

பட்டதும் வந்ததே புத்தி

சுண்டுவிரலின் பக்கத்தில்
சுக்ரதிசை வேண்டுமென்று
நாலுபேரிடம் கடன்வாங்கி
நல்லநாளில் மோதிரமணிந்தேன்
பேருந்துக்காய் காத்திருந்தபோது
பேருந்து வரவில்லை, புத்திவந்தது
ஆம் எதிரே காரில் சென்றான்
கல்மோதிரம் விற்றவன்... 

தேகத்தில் ரோமங்கள்

உன் அழகைப்பற்றி எது சொன்னாலும் 
உண்மை என்றெண்ணி மகிழ்கிறாய்
காதல் வளர்க்க உண்மை சொன்னாலும்
பொய் என்றாய் காதல் இல்லையென்றாய்
தேகத்தின் ரோமம்போல் சந்தேகங்கள்....

மரணித்தபின்,,,

சுற்றிலும் மலர்கள்
சூழ்ந்த சொந்தங்கள்
பெருமை பேச்சுக்கள்
ஆறுதல் வார்த்தைகள்
வேண்டிய உதவிகள்
வாழும்போது இல்லையே
இதுபோல...