இலையுதிர்காலம் இன்பமானதே
உன் நினைவுகள் விட்டு
எல்லாம் உதிர்ந்து போனதே!
நீரில்லாத வேரானாலும்
நீயில்லாத பொழுதானாலும்
இன்பமாகுதே மனமும் மகிழுதே
மணிதுளியும் கரையுதே உலகம் மறக்குதே
தொடர் அலைகளைப் போலே
உன் நினைவுகளாலே!
இமைகள் கொண்டே ஆணினத்தை அழிக்கிறாய்
ஆடையால் தென்றலை அழகாய் அசைக்கிறாய்
மேனிஅசைவுகள் மன்மத தொல்லையானதே
பட்டுச்சிறகால் இதயங்கள் கொள்ளைபோனதே
சிங்கங்கள் எல்லாம் காதல் மான்களானதே
இலையுதிர்காலம் இன்பமானதே
உன் நினைவுகள் விட்டு
எல்லாம் உதிர்ந்து போனதே!
உன்னிடம் எத்தனை அழகென
எண்ணத் துடித்தேனடி காணும்போது
ஒற்றை அழகில் உலகம் மறந்தேனடி
என் கண்ணால் உன்னழகு கொள்ளை போனதடி
கடைக்கண்ணால் என்னுயிர் என்கவுன்டர் ஆனதடி
புதுஅழகியல் படைத்து பூமியில் பிறந்தவளே
அங்குமிங்கும் அசையும் அசைவ சித்திரமே
மண்ணில் பூத்த பெண்ணழகை காணவே
கிழக்கும் மேற்குமாய் ஆதவன் அலைந்தானே!
சன்னலின் வழியே மின்னல் முகம் காணாது
அங்குமிங்கும் அலைந்தே நிலவும் தேயுதே!
- சந்துரு
உன் நினைவுகள் விட்டு
எல்லாம் உதிர்ந்து போனதே!
நீரில்லாத வேரானாலும்
நீயில்லாத பொழுதானாலும்
இன்பமாகுதே மனமும் மகிழுதே
மணிதுளியும் கரையுதே உலகம் மறக்குதே
தொடர் அலைகளைப் போலே
உன் நினைவுகளாலே!
இமைகள் கொண்டே ஆணினத்தை அழிக்கிறாய்
ஆடையால் தென்றலை அழகாய் அசைக்கிறாய்
மேனிஅசைவுகள் மன்மத தொல்லையானதே
பட்டுச்சிறகால் இதயங்கள் கொள்ளைபோனதே
சிங்கங்கள் எல்லாம் காதல் மான்களானதே
இலையுதிர்காலம் இன்பமானதே
உன் நினைவுகள் விட்டு
எல்லாம் உதிர்ந்து போனதே!
உன்னிடம் எத்தனை அழகென
எண்ணத் துடித்தேனடி காணும்போது
ஒற்றை அழகில் உலகம் மறந்தேனடி
என் கண்ணால் உன்னழகு கொள்ளை போனதடி
கடைக்கண்ணால் என்னுயிர் என்கவுன்டர் ஆனதடி
புதுஅழகியல் படைத்து பூமியில் பிறந்தவளே
அங்குமிங்கும் அசையும் அசைவ சித்திரமே
மண்ணில் பூத்த பெண்ணழகை காணவே
கிழக்கும் மேற்குமாய் ஆதவன் அலைந்தானே!
சன்னலின் வழியே மின்னல் முகம் காணாது
அங்குமிங்கும் அலைந்தே நிலவும் தேயுதே!
- சந்துரு