Monday, November 7, 2011

புத்தகம் (குழந்தைப் பாட்டு)



அறிவை வளர்க்கும் ஆயுதமாய்
என்னை போலே யாருண்டு!
படக்கதை கட்டுரை நாவல் என
என்னில் பலவகை நூலுண்டு!

அடிப்படை அறிவை வளர்த்திடவே
தினமும் பாடப்புத்தகம் படித்திடுவோம்!
அறிவால் உலகை ஆய்ந்திடவே
அனைத்து நூலையும் படித்திடுவோம்!

பள்ளி செல்லும் வழக்கம்போல்
நூலகம் செல்லப் பழகிடுவோம்!
அடிக்கடி புத்தகம் படித்தேநாம்
அறிவு விதையை தூவிடுவோம்!

சிறந்த நாளில் பரிசாக
உடையும் பொம்மைகள் வேண்டாமே!
வாழ்வில் சிறந்து விளங்கிடவே
அழியா நூலைத் தாருங்களேன்!

Tuesday, October 4, 2011

தள்ளாடுதே தமிழகம் தற்பொழுது!


வா மச்சி சரக்கடிக்கலாம்
நாமெல்லாம் வருங்கால அப்துல்கலாம்
நல்ல பொழுதையெல்லாம் இருட்டாக்கலாம்
போதையே பெரிதென்று பொழுதை கழிக்கலாம்!
நாம குடிச்சாத்தான் அரசுக்கே வருமானம்
... எல்லாரும் குடிக்குறப்போ என்ன அவமானம்!
எவ்ளோ வந்தாலும் குடும்பதொல்லை இருக்குமே
எண்பது ரூபால இந்த உலகமே மறக்குமே!
களவையும் கற்று மற
காலையிலேயே மூடியை திற!

நினைப்பது? நடப்பது?

ஆண் பெண் காதல் -
இருட்டில் கயிற்றை மிதித்து
பாம்பென்று கத்தியதைப்போல்!

காதல் தோல்வி இப்படித்தானோ?

ருசி கண்டேன்
பின் தொடர்ந்தேன்
பொழுதெல்லாம் மூழ்கிப்போனேன்
வாழ்வைத் தொலைத்தேன்!
முன்பு காதலில்
பின்பு போதையில்!

காந்தி ஜெயந்தி - காந்தி நோட்டு!

தன்னிகரற்ற தமிழகத்தில்
அனைவருக்கும் குடிப்பழக்கம்
ஞாயிறில் சற்று அதிகமிருக்கும்
நேற்று,,,
மதுக்கடை அனைத்தும் மூடல்
மகாத்மாவுக்கு நன்றி - கள்ள மார்கெட்டில்
விற்றவன் கையில் காந்தி நோட்டு!

------------------------------------------------------------------

காந்திஜெயந்தி சிறப்பு நிகழ்ச்சி!
சின்னத்திரையில் சில
வன்முறைப் படங்கள்!

காதலை இப்படியும் பயன்படுத்தலாமே!

காதல் வந்தால் பசி ஏற்படாதாம்!
- - - உண்ணாவிரதம் இருக்க நினைப்பவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் சிறகு முளைக்குமாம்!
---- பிளைட் டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் தூக்கம் வராதாம்!
... ... ---- தேர்வு எழுத இருப்பவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் நினைவாலே இளைத்துவிடுவார்களாம்!
---- உடல் இளைக்க பயிற்சி செய்பவர்கள் கவனிக்கவும்!
காதல் வந்தால் உயிரே போகுமாம்!
----- தற்கொலைக்கு முயல்பவர்கள் கவனிக்கவும்!

இப்படிக்கு,
காதல் வாசம் அறியாத காளை!

காதலை விரும்பாதவர்களுக்காக!


கன்னியர் வேண்டாமே காதலும் வேண்டாமே
என தனியாய் ஒரு கண்ணியம் வளர்த்து
பகுத்தறிந்து உணர்ச்சிகள்அடக்கி
பெண்வாசம் தவர்த்தலே பெருமை என்று
வாழ்வோரும் இவ்வுலகில் உண்டு!

பொண்ணப் பாக்காத போய் பொழப்பபாரு
இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை
இளமையில் பதுமை முதுமையில் புலம்பல்!
நீ அம்பானி ஆனாக்க ஆயிரம்பொண்ணுதான்
நீ பில்கேட்ஸ் ஆனாக்க உன்பின்னாடி பிகருதான்!

அவளின் அழகிய அழகை
அவளே உலகம் மறந்து உள்ளம் திறந்து
உன்னிடம் ஒப்படைக்க நீ தீட்டும்
அற்புத திட்டத்தின் அருமைபெயர்தான்
காதலோ? லோ லோ என்றானபின்
காதல் வோல்டேஜ் லோ ஆனபின்
இல்லத்தில் மோதலோ? உள்ளத்தில் சாதலோ?

காதல் வேண்டாமே கடமையை செய்
உள்ளம் மயக்கி உன்வாழ்வழிக்கும் உணர்வே பொய்
உணர்ச்சியில் மூழ்காதே உலகத்தை மறக்காதே
ஒருத்திதான் வாழ்வென்று உன்வாழ்வை இழக்காதே!

Thursday, August 25, 2011

மெளனமே! மெளனமே! மெளனமே!

மெளனம், அமைதி, வேறுபாடு?
அதை அறிய முற்பட்டேன்
மன அமைதி இழந்தேன்
மெளனம் ஆனேன்!

ஆசிரியர் கேள்விக்கு
பதிலறியா மாணவன்
தரும் பதில் மெளனமே!

பொம்மை வேண்டாமென
பொரிந்த பெற்றவளை
கோபம்கொண்டு டூ விட்டு
வாய்பேசாத குழந்தையை
பொம்மையாய் மாற்றுமே மெளனமே!

ஊடல் கொண்ட காதலர் இடையே
உண்மைக் காதல் உயிர்பெறுமே
காதலில் இருமனம் கொள்ளுமே
அகஇன்பமே சிறுகோபமே
உடம்பில் நரம்பில் உஷ்ணமே
உள்ளத்தில் காதல் பெருக்குமே
அதுவே உயிரின் மெளனமே!

உயிருக்குயிராய் உடலின் நிழலாய்
எண்ணத்தின் பிம்பமாய் வாழ்ந்தவரின்
உயிர் பிரிந்த உடலருகே
அழுகை வராது விழிநீரும் இராது
அதிர்ச்சியில் நம்மனம் மெளனமே
நம்முகமே வான் நோக்குமே!

எதிர்கட்சியாய் இருந்தாலும்
எதிரில் அமர்ந்தாலும் வார்த்தை
ஏதுமின்றி பேச வழியுமின்றி
எதுவும் பேசாது வாயே திறக்காது
எதிர்கட்சித்தலைவர் தமிழகத்தில்
இருப்பதும் காப்பதும் மெளனமே!

மெளனமே ஒரு மொழியாம்
பல நேரங்களில்
பல கேள்விகளில் தப்பிக்க
மெளனமே ஒரு வழியாம்!

Monday, August 22, 2011

நீயில்லையே! எனக்கு உலகில்லையே!

நம் மனதில் அழியாக்
காதல் இருக்கையில்
மாலை நாமிருப்போமே
மரத்தடி இருக்கையில்!

மனதில் காதலுண்டு
மயக்கும் மாலையுண்டு
கையிலே பூச்செண்டு
நீயில்லையே! எனக்கு உலகில்லையே!

பூவை நீவருவாயென்று
பூவுதிர்த்த மரமின்று
ஏன்நீ தனியென்று
கேட்குதடி! எனக்கு வலிக்குதடி!

நாட்டுல எதுவும் சரியில்ல!

அன்னா ஹசாரே
உண்ணா விரதம்!

சரியா நாலு நாளாச்சு
ஸ்ட்ரைக்கால லாரி நின்னு போச்சு!

கால் வருசம் போனபின்னே
சுப்ரீம்கோர்ட்டு சூடு வச்சதண்ணே!
பாடப்புத்தகம் பள்ளிக்கு வந்திருச்சு
காலாண்டு பரிச்சையோ போயிருச்சு!

அசோகரு ரோட்டோரம் மரத்த நட்டாரு
அரசியல்வாதி அதப்புடுங்கி வித்தாரு!
வெட்டி சாச்ச மரம்போல ரோட்டுல
உருளுறான் தமிழன் டாஸ்மாக் சரக்கால!

என்ன சொல்ல படும்பாட்டை
பாடிப்புட்டேன் எம்பாட்டை
உடனே திருத்தணும் நம்நாட்டை!

வானிலே நம் வாழ்விலே!

வாழ்க்கை வானம் போன்றது
நீள அகலம் கண்டவர் யார்?
வானில் மழைத்துளிபோலே
வாழ்வில் நட்புத்துளி விழுந்தாலே
வானம் கிழித்த வளைகோடாய்
வானவில் வண்ணமே தோன்றுமே
வானிலே நம் வாழ்விலே!

அன்னா ஹசாரே! திரண்டது நாடே!


எதிர்த்து பின் பணிந்தது மத்தியம்
வென்றது அன்னாவின் சத்தியம்!
பணப்பசி அடங்காதவரை அடக்க
நீ இருந்தாய் ஒரு உண்ணாவிரதம்!

ஒரு நாடு பல கட்சி
ஒரு ஆட்சி பல ஊழல்
ஒரு மசோதா பல எதிர்ப்பு
ஒரு குடிமகன் சிறையில் அடைப்பு!
ஜனநாயகமா? தனிநாயகமா?

ஒற்றை மனிதனுக்காக
ஒரு ஊரடங்கு உத்தரவு எதற்கு?
அப்போ ஆட்சியாளருக்கு பயமிருக்கு
மக்களிடையே மதிப்புமிருக்கு!

ஊழல் குழந்தைக்கு
பால் ஊற்றி வளர்தவர்க்கெல்லாம்
லோக்பால் கொண்டு பால் ஊற்றினாயோ?
பேசாத பிரதமரை கூட பேச்சுவார்த்தைக்கு
அழைக்க வைத்தாயோ?

உயர்ந்த நோக்கத்துக்காக
உண்ணாவிரதம் இருக்ககூட
உரிமை இல்லாத நாம்
எல்லாம் இந்நாட்டு மன்னர்தான்!

என் புத்தகத்து மயிலிறகு!


எல்லாக் காதலும் ஏகாந்தமே
என்னுடையதும் விதிவிலக்கல்ல!

திரியின் நுனியில் தீ இல்லா
தீபத்திற்கு அழகேதடி!
பாவை நீயும் பார்வையாலே
மோகக்காதல் தீயை பற்றவையடி !
பற்றவை மனதை எரியவை
மறக்கவை உலகில் மற்றவை!

மங்கையின்நினைவை தவிர
எல்லாம் மறத்தலும்
மங்காத காதலைத் தவிர
எல்லாம் துறத்தலும்
மாறாத அந்த நினைவாலே
எப்போதும் இருத்தலும்
மனம் மறுக்காது இப்போதே
இன்பமாய் இறத்தலும் காதலோ!

அவள் மீது கொண்ட அழகிய காதலை
நான் மட்டும் ரசிப்பேன் எப்போதும்
ஆம் அது யாரும் அறியாத
என் புத்தகத்து மயிலிறகு!

Saturday, August 13, 2011

சகோதர தினம்!

மணிக்கட்டில் கயிறுகட்டி ஒரு
மணியான தத்துவத்தை
மலரவைத்த மங்கையரே!

காதலென்று முட்டும் காளையர்க்கு
கன்னியர் இன்று கட்டுவது
மூக்கணாங்கயிறல்லவோ!
காதல் சொல்ல நேரமொன்று
வருமா என்று ஒருதலை தலையாய்
காதல் கொண்ட ஆணுக்கெல்லாம்
கதிகலக்கும் நாளல்லவோ!

சகமனுசியாய் பார்த்த பெண்ணை
சகோதரியாய் பார்ப்போமே!
முப்பத்மூனு சதம் எதுக்கு
முழுசாய் சமமென்று சொல்வோமே!

தாய் தங்கை அக்காளென்று
தனியாய் பாசம் கொண்டோமே!
எல்லாப் பெண்ணும் சமம்தானென்று
தேசம் கடந்த நேசத்தை வளர்ப்போமே!

Friday, August 12, 2011

வகுப்பறை காதல் வரையறை


கரும்பலகை மறந்து உன்
கருந்கூந்தலில் கவனம்!
ஆசிரியரின் கேள்வி மறந்தேன்
அதற்கெல்லாம் மவுனம்!
தமிழ் பாடம் எனில்
கவிதை வரைகிறேன்
ஆங்கில பாடம் எனில்
அதை சரிபார்க்கிறேன்
அறிவியல் பாடம் எனில்
அன்பை ஆராய்கிறேன்
கணித பாடம் எனில்
காதலை பெருக்குகிறேன்
சமூக பாடத்தின் போது
நல்ல சமூகமாய் வாழ
ஆசைப்படுகிறேன் உன்னோடு!

Thursday, August 11, 2011

தங்கமகளின் தங்கத்தோடு!

காதல் கனிந்த பின்
கடற்கரையில் அமர்ந்தபின்
காதலியின் காதோரமாய்
காதல் கதை பேச ஆசை
இதமாய் காதல் வாசம் நுகர்ந்து
இதழ் திறந்த போது
வார்த்தைகள் யாவும் வாயுவானதே!
தங்கதோடு என் தாடை தொட்டபோது!

காதலில் முழ்கிய பின்
காலநேரம் தெரியாதாம்!
அதனாலே இனிதாய்
ஒரு வணக்கம் பொதுவாய்!

காதல் வணக்கம்!


ஒரு தேயாத நிலவுக்கு
குறுஞ்செய்தி அனுப்பியே
என் நேரமும் நகமும் தேய்கிறதே!

இனி அவள் என்று ஆனதால்
இனியவளிடம் இரவெல்லாம் பேசியே
என் விழியும் வாழ்வும் விழிக்கிறதே!

பெருங் காதல் வளர்க்க
குறுஞ்செய்திகள் போதுமோ?

காலை நேரத்தில் கலகலப்பாய்
ஒரு காதல் வணக்கம்!

உன் உள்ளங்கை சூட்டை
என் கன்னங்கள் உணர!
என் உள்ளத்துப் பாட்டால்
உன் காதுகள் குளிர!
காதல் வளர்ப்போம் பெண்ணே!

மனித அறிவும் சரிவும்!


நல்ல விளை நிலங்கள்
நல்ல விலை போயிருச்சே!
விவசாயம் செஞ்சவங்க
சாயந்தான் வெளுத்திருச்சே!

மென்பொருள் வளந்திருச்சு
தின்பொருள் குறைஞ்சிருச்சு!
அறிவியல் வளந்துருச்சு
பசுமை குறைஞ்சிருச்சு!

நாளும் பொழுதும் நாம்
அறிவில் வளர்ந்தோம்!
சரியா பயன்படுத்தாம நாம்
சரிவில் வீழ்ந்தோம்!

Monday, August 8, 2011

குடிநீ(ர்) பாட்டில்!


குடிமக்களே! குடிநீருக்காக
அங்கே இங்கே எங்கேயும்
அலைய வேணாம் வீணா!
எங்க போனாலும் சுலபமா
கிடைக்குதுங்க அக்வாபீனா!
...
எல்லாத் தமிழனும்
அறநெறி மறந்தோம்
பிசிலெறிய தொறந்தோம்!

பால் விலையும் இந்த
பாட்டில் விலையும் ஒன்னுதான்!
புனிதமான நதிகளெல்லாம் இப்போ
புழுதி கிளம்பும் மண்ணுதான்!

பாலாறு தேனாறு எல்லாம்
பாடப் புத்தகத்து வரலாறு!
தொழில் நோக்கம் கொஞ்சம்
வழிமாறிப் போனதால இந்தகோளாறு!

குடிவாழ குடித்துவாழ
நீர் நிலை ஏதும் தேவைஇல்ல!
குடிநீரை விக்கிற நிறுவத்தின்
நிதிநலைமை குறைய வில்ல!

பாத்து பழகி வாங்கி கைப்பிடிச்சி
அனுபவிச்சா விடமுடியாது
காதலிச்ச அவளும் சரி
நீகுடிச்ச அக்வாவும் சரி!

பசின்னு வந்த பிச்சைக்கெல்லாம்
ருசியான சோறுபோட்டதப்போ!
வாடி வறண்ட தொண்டைக்கு
வடை கூட வாங்கி தாரேன்
தண்ணி மட்டும் கேக்காத இப்போ!

புட்டியால பொழச்சவன்
புட்டியால தொலைச்சவன்
ரெண்டுக்கும் வித்தியாசம் ஏதுமில்ல
பொழச்சவன் வெளியூரு
தொலைச்சவன் உள்ளூரு!

தாகம்னு வந்தா தண்ணி
குடிக்கத்தான் வேணும்!
இயற்கைய அழிச்சாக்க உடனே
நாம தடுக்கத்தான் வேணும்!

வா மச்சி தம்போடலாம்!

வா மச்சி தம்போடலாம்!
வாலிபர்களின்
வசீகர வசனம்!

கையில காசில்ல என்று சொல்ல
அக்காலத்தில்
கஞ்சிக்கு வழியில்ல!
மச்சி! தம்முக்கு கூட காசில்ல !
இக்கால இளைஞர்கள் இப்படி!

புகை உடல்நலத்திற்கு தீங்கானது
சந்தோசத்திற்கு தீங்கு இல்லையோ!

அவரவர் உடல் எரிந்த சாம்பலை
அப்போதே தருவதும் நீதானோ?

உன்னைப் பற்ற வைக்கும்போதுதான்
ஆறாம் அறிவு புகைகிறதோ?

புத்துணர்ச்சி சுரப்பிகளை எல்லாம்
புதுப்பிப்பது உன் புகைதானோ?

பஞ்சு வழி வந்த புகையெல்லாம்
நெஞ்சுக்குள் நுழைகிறதே!
வெண்பஞ்சு மஞ்சள் கறையானதே
என்நெஞ்சு என்னானதோ?

Wednesday, August 3, 2011

கனிந்தது வாழ்வும் - காதலும்!

முதுமையில் காதல் என்பது
அதிகமாகுமோ?
தோலின் சுருக்கங்கள் போல!
------- --------- -------
உதிர்ந்தது இளமை மட்டும்தான்
உணர்வுகள் அல்ல!
-------- ---- -----
கடந்தது காலம் மட்டும்தான்
கனிந்தஅன்பை அல்ல!
-------- ---- -----
தளர்ந்தது வயது மட்டும்தான்
காதல் அல்ல!
-------- ---- -----
இழந்தது உறவுகளை மட்டும்தான்
உன்னை அல்ல!
-------- ---- -----
பொக்கைவாய் வழியே காதல்
பொத்துக்கொண்டு வருதோ?
------ ------ ----
கன்னத்தின் குழி மறைந்து
கன்னமே குழியான பின்பு
கனிவாய் ஒரு முத்தமிட்டாயே
காதலியே! காதல் கிளவியே!
------ ------ --------

Friday, July 29, 2011

வானம் தொட்ட வறுமைக்கோடு!

ஆடிப்பட்டம் விதைக்கலான்னு
காணியத்தான் உழுதுபோட்டேன்
செம்மண் காட்டுல
கலப்பைபோட்ட கோட்டுல
நல்லாவே நானும்பாத்தேன்
அழியாத வறுமைக்கோட்ட!
------       --------      ---------
என்னோட மானங்காக்க
மழையே நீ வந்தா
ரெண்டுகோடும் அழிச்சிருமே
சந்தோசம் முளைச்சிருமே!
------       --------      ---------
மழையேதும் பெய்யாம
களையாத்தான் முளைச்சிருச்சு!
செலவேதும் இல்லாம
என்எருதும் மேஞ்சிருச்சு!
------       --------      ---------


விதைநெல்லு நாவாங்க
விவசாய கடன் வாங்க
விவரங்கேட்டு நான்போனேன்
சதிசெய்யும் மழையப்போல
அதிகாரி அவன் சொன்னான்
விவரமெல்லாம் ஏதும்வேணாம்
தாரத்தோட தாலி வேணும்!
ஊருக்குள்ள எனக்கு பகையில்ல
கடன்வாங்க வேற நகையில்ல!
------       --------      ---------
பட்டணத்து சீமாட்டி
கட்டிவந்த பட்டுசேலை
அதுபோல எங்கொல்லை
விளைஞ்சாக்க அழகு கொள்ளை!
------       --------      ---------
மழைமட்டும் பேஞ்சிருந்தா
வறுமை கொஞ்சம் தள்ளிநிக்கும்!
வளம்​கொஞ்சம் வந்திருந்தா
என்புள்ள படிச்சிருக்கும்!
------       --------      ---------
கஷ்டத்தை தீக்கத்தான்
கலெக்டர்கிட்ட மனுபோட்டேன்
விதைபோட நீர்வேணும்னு
மழைக்கிட்ட மனுபோட்டேன்
இதுவரை பதிலில்ல
மனுரெண்டும் நிராகரிப்போ!

Wednesday, July 27, 2011

எரியும் காதலும் உருகும் மெழுகும்!

எரியாத திரியாய்
திரிந்த என்னை
காதல்தீ ஏற்றித்தான்
உயிரின்திரியை எரித்தாயே!

காதல் வெப்பத்தில்
உருகி உருகி
உருமாறி நின்றாலும்
அழியாத மெழுகாய்
உன் நினைவு!

நான் மெழுகுவர்த்தி
உருகிப்போனேன்
ஒரு மெழுகுசிலையை
நேரில் பார்த்ததால்!

மெழுகை உருக்கிய மெழுகே
காதல்தீ ஏற்றியதுன் அழகே!

எரிதலுக்கு காற்று தேவை
அறிவியல் சொல்கிறது
உனக்காகத்தான் எரிகிறேன்
மூச்சுகாற்றை எனக்காகவிடு!

மென்மையான மேனி காதல்
வெப்பத்தை தாங்கதென்று
காதல் உஷ்ணம்
தாங்காதோ உன் மேனி
திரி அணைந்து புகைபரவும்போது
திரும்பி வந்தாயே!

மெழுகை உருக்கிய மெழுகு நீ
காதல்தீ ஏற்றிய அழகே நீ!

Friday, July 22, 2011

தனி​மையில் இனி​மை!



தனிமை என்பது உடலுக்கு
மட்டும்! ஆயிரம் நினைவுகள்
மனதில் புயலாய் முட்டும்!

காதலில் நனைந்தவர்க்கு இனிமை
கிட்டும்! இதயம் வலித்தால்
விழியில் கண்ணீர் சொட்டும்!

துன்பம் தணிக்க இன்ப
தனிமையை நாடு! வெற்றி
வந்தால் சொந்தங்கள் தேடு!

நம்மனதுடன் பேச நல்மனம்
இல்லா எல்லா நேரமும்
நம்மனம் தனிமைதான்!

Thursday, July 21, 2011

காதலின் நிறம்!


நினைவுகள் நித்தம்நித்தம்
நில்லாமல் சுற்றுவதால்
கண்இமைகள் சுமையாகி
தூக்கமில்லை எனும்போது
என் விழிநிறம்போல
காதலின் நிறம் "சிவப்பு"!

அதிகாலை விடிந்தாலும்
நீலவானம் கருத்தாலும்
வேலைபளு மிகுந்தாலும்
நம்முகம் சந்திக்கும்
அந்திவேளை நேரம்போல
காதலின் நிறம் "மஞ்சள்"!

கடற்கரை மணல்மேலே
பூங்காவின் புல்மேலே
மனமிரண்டும் ஒன்றுபோலே
விரல்தொட்டு இதழ்கள்பேசும்
காலந்தெரியாத காதல்போலே
"கருங்"கூந்தலில் முகம்புதையும்போது
காதலின் நிறம் "கருப்பு"!

காதல் பிறந்து
காதலில் தவழ்ந்து
காதலின் நடைபழகி
நாமிருவர் என்றாகி நடைபோடும்போது
கருந்தூசி ஒன்று உன்
விழி"வெண்" படலத்தில் விழுந்தது
என் உயிர்க்காற்றை ஊதி
வெளியே தள்ளும்போது
காதலின் நிறம் "வெண்மை"!





Monday, July 18, 2011

விலைகுறைந்த செல்போனும், விலைமதிப்பற்ற என் காதலும்!

அவள்
மூச்சுக் காற்றின் ஓசைமுதல்
முத்தத்தின் சப்தம் வரை
காதில் சேர்த்து காதல் வளர்த்தது
நீ!
 -----       -------        ---------
என்
இதயத்தில் அழியா பிம்பம்
அவள்முகம்!
அதை வால்பேப்பராய் வைத்து
ஒளிவீசி வாழ்வது
நீ!
 -----       -------        ---------
நான்
காலையில் அவளோடு காதல்
செய்யும்போதும்
அந்திவேளை அவளோடு
அரட்டையின்போதும்
என் உடலின் உஷ்ணத்தை
உள்ளங்கையில் உணர்பவன்
நீ!
  -----       -------        ---------
குமரி
அவள் அனுப்பிய குறுஞ்செய்தி
பூக்களை எல்லாம்
பூங்கொத்தாய் சேர்த்துவைத்த
பூக்கூடை
நீ!
  -----       -------        ---------
என்
உள்ளத்தில் வசிப்பவள்
உலகில் எங்கிருந்தாலும்
உறவை வளர்த்து
தொலைவை குறைத்த அறிவியல்
நீ!
  -----       -------        ---------
என்
சம்பளம் முழுதும் சாப்பிட்டாலும்
பசி அடங்காதவன்
நீ!

Wednesday, July 13, 2011

காத​லை மட்டும்!


இயன்ற பொழுதும்
காதலை மட்டும்
என் பேனா எழுதும்!
-----     -----     -----     ----
விழியில் விழுந்தேன்
வாழ்வு கரைந்தது!
நிமிர்ந்து எழுந்தேன்
காதல் தடுத்தது!
கனவுகள் அனைத்தும்
உன்னால் ஊனமானது!
அழியாக் காதல்
அதுவே என் வேலையானது!
-----     -----     -----     ----
தெருமுனையில் வரும்போது
விழிமுனையில் நீபார்த்தது
பேனாமுனையில் வடிந்தது
கவிதையாய்! காதலாய்!
-----     -----     -----     ----
வனத்தில் திரிந்த
வண்டு நான்!
ஒரு புல்லியில் அமர
வைத்த பூவாய் நீ!

-----     -----     -----     ----
யாரும் செய்யாததை நீ செய்
அப்போதுதான்
என்மீது காதல் என்றாய்!
கனத்த காவியமாய்
உன்னை காதல் செய்கிறேனே
இதை யார் செய்ய முடியும்!
-----     -----     -----     ----
 

Wednesday, June 29, 2011

வனமும் அழகு ரசிக்கும் மனமும் அழகு!


நீ இருக்கும் வனம் அழகு - உனை
பார்த்தாலே மனம் அழகு!
பறவையில் நீ அழகு - கருமேகம்
வரும்போது ஆடல் மிக அழகு!
---------------------------------------
உடலில் நிறம் பல கொண்டாலும்
கருநிறம் கண்டாய் வானத்திலே!
தோகை விரித்து ஆடிக் களித்து
அழகை குடிவைத்தாய் வனத்திலே!
---------------------------------------
சிறுஉணவு நீ தின்று
பேரழகு கொண்டதென்ன!
பீலியின் சிறு அசைவில்
காண்போரை கொன்றதென்ன!
-----------------------------------------
அகிலத்தை அழகினால் வென்றாயே
தேசத்தின் பறவையாய் நின்றாயே!

Tuesday, June 28, 2011

காந்தியும் காக்கையும்!


கோலெடுத்தால் காக்கைகள் மிரண்டோடும்
ஆனாலும்
இவர் அகிம்சா என காக்கையும் அறிந்ததோ?
அதனால் அடைக்கலம் புகுந்ததோ?


மனுசனுக்கு இடமில்ல
தரையில வீடுகட்ட!

அதனால் எனக்கும்
மரமில்ல கூடுகட்ட!

மேல் சட்ட போடாம
மேதாவி ஆகிபுட்ட!

அகிம்சா கொண்டுதான்
அகிலத்த காத்துபுட்ட!

ஒரே விழிதான் உண்டெனக்கு
உலகத்த நான் பாக்க

ஒரே வார்த்தைதான் நீ சொன்ன
உலகத்த நீ காக்க!
அகிம்சா!!!


ஓ...ஓ...ஓ...

ஓநாய் - தூங்காத காதலர்களாய்
ஓடும் நிலா - அவர்களின் தூதுவனாய்
ஓங்கிய மரங்கள் - வேர்விட்டு நிலைபெற்ற காதலாய்!

காதல் கருத்தோடமைந்த
கருப்பு வெள்ளைப்படமோ? இது!!

கறைகள் பல இருந்தாலும்
காதலர்க்கு அது வெண்ணிலாதான்!

உண்ட மயக்கம்! (உண்டது காதலை)


மதியம் உண்டவுடன்
சில வரிகள் மனதில் உதயம்!
வெற்றிலை பாக்கை போல!

உனக்காய் எத்தனை வரிகள்
....கிறுக்கியிருப்பேன்! - நான்!

நீ ஒரு முறையேனும்
முயன்றதில்லையா? என்றேன்!

உன் முகத்தில் நாணம் உதித்தது
என் யுகத்தில் எல்லாம் தோற்றது!
என் பார்வைக் கோணம் அறிந்ததும்
முகத்தில் நாணம் நிரப்பினாய்!

-------------------------------------------------

அதுவே கவிதையாய்
என் பக்கத்தை நிரப்புகிறது!
-------------------------------------------------
ஆம்
காதல் வந்தால்
பசி இருக்காது என்றார்கள்!
வயிற்றின் பசி தெரிவதில்லை
மனதின் பசி தீர்வதில்லை! என்ன செய்ய!

-------------------------------------------------
ஒ அந்த தேவதை யாரோ ?:)
இந்த மண்ணில் இருக்கிறாள்
என் கண்ணில் இல்லை - காரணம்
என் கண்கள் இன்னும் காணவில்லை
அதனால் நான் கண்டதில்லை
காதலின் எல்லை!
-------------------------------------------------
எல்லாம் கேள்வி ஞானம் மட்டும் !
உண்மைக் காதலை
உள்மனம் உணர்ந்தால்
என் கவியில் நிச்சயம் தேன் சொட்டும்!

-------------------------------------------------
காதல் மீன்தான்
அது கிடைக்கும் வரை
வாழ்வு வீண்தான்!

ஓர் இதழாய் நான்!


உறவுகள் எல்லாம் உதிர்ந்தாலும்
உன்னைக் காக்கும் ஓர் இதழாய் நான்!



உன்னோடு
உன்னத உறவுண்டு !

பருக காதல் தேனுண்டு!

பரிசுத்த "வெண்" காதலை
மெய்பிக்கும் "கரு"வண்டு !

Monday, June 27, 2011

வேகத்தடை

வேகத்தடையை வெறுக்கிறேன் பொதுவாய்
இப்போது விரும்பி போகிறேன் மெதுவாய்
நீ பஸ்ஸ்டாப்பில் நிற்கும்போது!


ஒரு வேகத்தடையை கடந்து வந்தபோது தோன்றியது!

மன்னிப்பு

பூ ஒன்று மற்றொரு பூவை
பூக்கவைக்கும் அது மன்னிப்பு!
பூப்பது அன்பு!

இந்த வார்த்தை

இடைமறிக்க முடியாத ஒரே இடம்
என் தாயிடம்!

Thursday, June 23, 2011

காதலி(யி)ன் பேச்சு!

காதல்கலை தாயே!
கண்டதும் வாழ்வை கலைத்தாயே!
-------------------------------------------
நீ எந்த மொழியில் பேசினாலும்
எனக்கு அது காதல் மொழி!
-------------------------------------------
நீ பேசும் வார்த்தைக்கு பொருள் எதற்கு
நீ என்னுடன் பேசினாலே
"காதல்" என்று பொருள் எனக்கு!
-------------------------------------------
விழியால் பேசி இதயம் தொட்டவள் நீ!
இதழால் பேசினால் என்னாகுமோ?
-------------------------------------------
உன் வண்ண ஆடை வளைந்தாடும்போதும்
உன் கரும்சிகை காற்றில் பறக்கும்போதும்
விழியின் இமைகள் தொட்டுக்கொள்ளும்போதும்
காலணியின் ஓசை காதைத் தொடும்போதும்
நீ என்னுடன் பேசுவதாய் நினைவு எனக்கு!
-------------------------------------------
நீ பேசும்போது கண்டபடி சுழல்கிறது
என் மனம் - உன் நாவைப் போல்!
-------------------------------------------
நீ பேசும்போது நான் குறுக்கிடுவதில்லை
ஏனெனில் உன் பேச்சழகில் என்
எதிர்கேள்விகள் எல்லாம் இறந்துவிடுகின்றன!
-------------------------------------------

சந்தோச"டே" தான் சன்டே!


அரிபரியா ஆறு நாளும் வேலதான்
அமைதியா ஒரு நாளும் தேவதான்!
.
ஆறு நாளா சம்பாதிச்ச
காசெல்லாம் சந்தோசமா கரையுது!
.
மத்த நாளு டென்சன் பிபி டார்கெட்டு எகிறுது
ஒத்த நாளில் குடும்பத்தோட மனசு நிறையுது!
.
புதுசா நடக்கும் புள்ளபோல
ஆறுநாளும் போகுது!
.
சன்டே மட்டும் பத்த வச்ச
சரவெடிபோல சரசரன்னு வெடிக்குது!
,
இந்த வீக்எண்ட நம்பித்தான்
வீக்கே இங்க பொறக்குது!
.
வீக்எண்ட்னு சொன்னாலும்
இது வாரத்துல முதநாள்தான்!
.

வீக்குக்கு இது எண்டு
ஹேப்பிக்கு இது பிகினிங்தான்!
.

ஆறு நாளும் வாக்கிங்தான்
வீக் எண்ட்னா பிக்னிக்தான்!

Monday, June 20, 2011

காதல் மரமா​னேன்!


ஓ மரப்பெண்ணே!
உன் உள்ளம் அரிக்கும்
கரையானாய் என் காதல்!


ஆம் சரிதான்!
காதல் உன்னை துளிர்க்க வைக்கும்
உன்னை தழுவும் கிளையாய்

நான் இருக்கும்போது!


சில புகைப்படம்
மிக பொருள்படும்!
ஆனால் இது
மிக்க பொருள்படும் ஒரு புகைப்படம்!


மழை என்றால்
வேரில் சேர்வேன்!
கிளை என்றால்
வாழ்வில் சேர்வேன்!


மரத்தில் பெயர் எழுதும் காதலர்கள்
மத்தியில் இங்கு நிற்கிறது
மரமே காதலாய்!
என் காதலியாய்!




காதல் எங்கு இருக்கிறது என்று கேட்டேன் உன்னிடம்!

நீ சொன்னாய் ,,,,,
மலரில் மணமாய்
வேரில் நீராய்
இலையில் நிறமாய்
உணவாகும் ஒளியாய்
உன் காதல் என்றாய்!

அனைத்தும் உணந்தேன்
எனினும் காதலை
காணவில்லை கண்ணில்!
நான் பூத்துக்குலுங்கும்போது
நீ தொட்ட மரம்!
நான் இலைஉதிர்ந்து காயும்போது
காதல் பட்ட மரம்!

வீட்டுக்கு ஒரு மரம் வேண்டும்!
இவள் போன்று காதலியாய்!
பசுமையாகும் உலகும்
நம் உள்ளமும்!

Monday, April 18, 2011

​​சே​​லைகள் கடந்த சா​லை!

ஒளிவீசும் புன்னகையை பார்த்து
வழிவிடாதோ வாகனங்கள்
என்பதற்காகத்தான்!


வண்டி நின்ற பின்பும்
விபத்து ஏற்பட்டது பெண்ணே
உன் புன்னகையால்!


சாலையை கடப்பதற்குள்
காதல் பாதை அமைத்தாயே பெண்ணே
என் மனதில்!


beauty இருந்தாலே
majority இருக்கும்!

​பெண்புறாவும் - ​வெண்புறாவும்

பெண்புறாவின் விரல்களில்
வெண்புறாவோ?


விரலில் பறவை அமர்ந்ததால்
நீ ஒரு "பூ" மரந்தான்!

அருகில் பறக்கும் பறவை
சிறகால் வீசுது வெண்சாமரந்தான்!


உன் விரல் தொட்ட புறாக்களே
விலக நினைக்காதபோது!
என் மனம் தொட்ட காதல்
எப்போதும் விலகாது!


நான் உன்னை நலமா
என விசாரிப்பது வீண்தான்!!
காரணம் உன் இதயமே
நான்தான்!


பறவையின் சிறகு
பாவையின் அழகு
ஆடையின் வெண்மை
இயற்கையின் பசுமை

அ​னைத்தும் மன​தை  வ​தைக்கிறது
அப்படி​யே காத​லை வி​தைக்கிறது!


கற்பனைக்கு வானமே எல்லை
ரசனைக்கு வானமும் இல்லை!
அதையும் தாண்டியது
கலைக்கு வேண்டியது!


Sunday, April 17, 2011

தீயாய் நீ - உருகுவது நான்!




மெழுகுவர்த்தி
அணையும் வரை உருகுவது
தலைமேல் தீபம் சுமப்பது
தீயை தாங்கி தானே அழிவது!
                 ----------------
காதல்
அணைக்கும் வரை உருகுவது
உச்சிமுதல் பாதம் வரை
சுககுளிர்ச்சி தீயை வளர்பது!
தீயை தாங்கி தானே அழிவது!
                 ----------------
என் காதல் நிலாவின்
முகம் காட்டிய மெழுகுவர்த்தி!
                 ----------------
மென் கன்னத்தில் கைவைத்த
உன் காதல் கவலை முகத்தை
வெண் மெழுகு காட்டிக் கொடுத்ததோ!
                 ----------------  
மெழுகின் மேலிருக்கும்
நெருப்பு அசையாமல் எரிவதாய்
நினைக்கிறாய் நீ!
                
உண்மை அதுவல்ல
ஒளிவீசும் உன் முகத்தை
அசையாமல் பார்க்குது தீ!
                  ----------------
நினைவுத் தீயால்
நித்தம் நித்தம் உருகியதெல்லாம்
ஒன்றாகிப்போனது அருகில்
நீ வந்தபோது!
                  ----------------

பத்தாம் வகுப்பு
பரிச்சைக்கு பின்னே
பாவை உன்னை
பார்த்திருந்தாலே
பாசாகியிருப்பேனே!
                 ----------------
நீ என்னுள்
காதல் விளக்கேற்றி
அறிவொளியை
அணைத்தாயே!

உருகுது என்
வாழ்வும் நெஞ்சும்
நினைவுத் தீயை
நீதான் அணைத்தாயோ?
                  ----------------

Saturday, April 16, 2011

​​ம​னோதிடம் ​​சொல்லுமா ஜோ"திடம்"!?!


மாசம் ஆனா சம்பளந்தான்
கடன் தொல்ல முடியவில்ல!

செருப்பு தேஞ்சு போச்சு
தேவை இன்னும் குறையவில்ல!

நடுரோட்டுக்கு நான் வருவனான்னு
ரோட்டோரமா இருக்குற நீ சொல்லு!
நான் வேலை செய்யும் இடத்துல
என் திறமையத்தான் கண்டுக்கல!

என் முகத்தை பாத்தவுடனே நீ
இளிச்சவாயன்னு கண்டுக்கிட்ட!
 
வயிறு பசியாயிருந்தா
மனம் நினைக்கும்
சோத்தமட்டும்!

வாய் வெத்தலபோட்டா
மனம் வாங்க நினைக்கும்
உலகை மட்டும்!

Monday, April 11, 2011

பு​கையும் - ப​கையும்




இந்த ஒரு விரல் இழப்பால்
மனதும் அழுமே!
மீறி இழந்தால் உங்கள்
வாழ்வு நலமே!
அடுத்தவர் புகைத்தால்
அடுத்த கணமே!
நம் மனம் நாடும் அதிலே
வீழூம் அதுதான் குணமே!
பஞ்சு வழியே புகையை இழுத்தாய்
நெஞ்சுக்குள்ளே நோயை வளர்த்தாய்!
வாயருகே எரியும் ஒரு துளி நெருப்பு
வாழ்க்கையை எரிக்குமே!
புகைவிட சொன்னதால் புகைக்கிறேன்
அதை விட சொன்னதால் மனதில் புகைகிறேன்!

Monday, March 28, 2011

ஆச்சர்ய குறியும்! ​கேள்விக்குறியும்?




 
இன்றைய நல்ல குழந்தைதான்
நாளை நாட்டின் ஆச்சர்ய குறி!
இன்றைய குழந்தையின் வாழ்வில்
சாத்தியமா என்பது கேள்விக்குறி!

சன்ரைஸ் ஆகுமுன்னே
டைம்பீசு அலறுது!

சன் லைட் வருமுன்னே
காலைக்கடன் முடியுது!

பிரேக்பாஸ்ட் முடியுமுன்னே
ஸ்கூல் பஸ் வருகுது!

என் உடம்பு வளருமுன்னே
என் மூளை வளருது!

வயசு பெருக்கும் முன்னே
என் உடம்பு பெருக்குது!

எனக்கு வழியில்ல வாலாட்ட
என்தாய்க்கு நேரமில்ல தாலாட்ட!
 

Thursday, March 24, 2011

உழை நீ! இளநி!



நீங்க இளநி குடிங்க!
கட்சி கட்சின்னு சொல்லி
கால் கடுக்க நின்னாரு!

அடுப்பு புகையவில்ல
குழந்தைக்கு துணியுமில்ல!

தேர்தல் வந்தாக்க பாதை
தெரியாம இருந்தாரு போதையில!

கொடி கட்ட போன மச்சான்
கொட சாஞ்சு வந்தாரு!

அவரு கட்சி ஜெயிச்சிடுச்சி
என் வாழ்க்கை முடிஞ்சிடுச்சி!

புள்ளய காப்பாத்த
புதுமைப் பெண்ணா நாமாறி
அருவா கையிலெடுத்தேன்!

எந்த கட்சி வந்தாலும்
எம்பொழப்பு அன்னாடங்காச்சிதான்!

எம்புள்ள கஞ்சிகுடிக்க
நீங்க இளநி குடிங்க!
 

Wednesday, March 23, 2011

வந்தது வந்துவிட்டது! காதல்!


ஊசலாடும் நெஞ்சிலிருந்து
உயிரை பிரித்து எடுத்தாயே!

வாழும் வாழ்க்கை வீணென்று மெல்ல
சாகும் உயிரை தடுத்தாயே!
 
நேசம் என்று உட்புகுந்து என்
வேசம் முழுதும் மாற்றிவிட்டாய்!

காகித கடிதம் ஒன்றை தந்து வெண்
காகித மனதில் உன் பெயரிட்டாய்!

பெருமழையில்
பெரும் மலைகள் கரைவதில்லை!

சுடும் வெயிலில்
நதிகள் சுடுவதில்லை!
 
காதல் இருக்கு ம​லை​போல!
காதல் ஓடுது நதி​போல!

Friday, March 18, 2011

பூ! பூ பூ​வையர்




பூவும்
பூவையரும் ஒன்றே!

அதனால்
இதுவும் நன்றே!
அழகு
ஆம் அழகுதான்!

பூவின் இதழ் பிரிவதும்
காதலில் இதழ் சேர்வதும்!
பூவை பறிச்சாலும்
பூவையர் சிரிச்சாலும்
வைக்க ஒரு இடம் வேணும்!

பூவை பறிச்சா ஒரு நாள்தான்
பூவையர் சிரிச்சா ஒரு யுகந்தான்
அழகா ஒரு காதல் தோணும்!


அருவிக்கு
அருகில் பெண்ணைப் பார்த்தபோது
வந்து விழுந்த
வார்த்தைகள்!



பால்போல் அருவி
உன் முகமும்தான்!

தலைகீழாய் விழுவது
அருவிமட்டுமல்ல ஆண்களும்தான்!

அருவிக்கு அருகிலே இருக்கிறாள்
மனதை அழகிலே நனைக்கிறாள்!

இயற்கையைவிட அழகாய் இருக்கிறாய்
இருந்தும் நீ ஏன் சிரிக்க மறுக்கிறாய்!

சாத​னைப் ​பெண்!


தடைகளை தாண்டும்
தன்னம்பிக்கை பெண்
தமிழகத்தில்
தண்ணீருக்காக!


படிதாண்டா பெண்
என்பதுதான் வாக்கு!
தண்ணீருக்காக
தலைகீழானது
இன்றைய போக்கு!


 
ஒரு குடம் நீருக்காய்
உயரம் தாண்டும் இவள்
ஒலிம்பிக் சென்றிருந்தால்
ஒரு பதக்கம் கிடைத்திருக்கும்!

விளையாட்டுத்துறையும்
நீர்வளத்துறையும்
செய்துகொண்ட வளர்ச்சி
ஒப்பந்தமோ இது?
 
பூட்டு போட்ட கேட் எதுக்கு?
பூவையருக்கு வேற ரூட் இருக்கு!
 
எம்புருசன் தண்ணிபோட்டு
படுத்திருக்கான் திண்ணையில!

உசரம் தாண்ட வேண்டியிருக்கு
ஒரு குடம் தண்ணிக்குத்தான்!
 
அவனோட போராட்டம் கோட்டருக்கு
சாதனை உசரம் தாண்டிபுட்டேன் வாட்டருக்கு!
என்னத்தான் உசத்திபுட்டான்
எம்புருசன் வாழ்க்கையில!
 

Friday, March 11, 2011

Master Batsman Sachin


இருபது ஆண்டாய்
கிரிக்கெட்டை ஆண்டாய்!


சென்சுரியில் ஒரு சென்சுரி அடித்த
உன்னை மறவாது 21வது சென்சுரி !

தேர்தல் ஆத்திச்சூடி!


அய்ந்தாண்டு ஆட்சியிங்கே
ஆட்டம் காணுது!
இலவசத்தை நம்பித்தான்

ஈன்னு இளிக்குது!
உயர்வான கொள்கைன்னு
ஊரெல்லாம் ஓட்டுகேட்குது!
எதிர்க்கட்சி குற்றச்சாட்டை
ஏற்க மறுக்குது!!
ஐந்து கட்சி கூட்டணின்னு
ஒன்னா நிக்குது!
ஓட்டு போடும் மக்கள்?! முழிக்குது!!

Monday, March 7, 2011

மார்ச் 8 ​பெண்கள் தினம்

பெண்ணுரிமை தினம் இன்று!

ஆண்கள் புரிதல் நன்று!!


பெண்ணுரிமை பத்திதான்
பலவாறு பேச்சிருக்கு!
உண்மையில அவங்களுக்கு
உரிமைதான் எங்கிருக்கு!

பொண்ணுன்னா பூங்கொடிதான்
ஆண்ணுன்னா அடாவடிதான்!
பொறந்ததுதான் குத்தமா இல்ல
ஆண்மனசுலதான் அசுத்தமா!

தலைப்பாக்கட்டி கவிஞனவன்
பாட்டுக்கட்டி சொன்னானே!
அவனோட தாசன் கூட
துணைக்குத்தான் வந்தானே!

பெண்ணில்லாம ஆணில்ல
பெண்ணில்லாம யாருமில்ல!
ஆனாலும் அவளுக்கு
ஆணால உரிமையில்ல!

ஆண்களெல்லாம்
அடியெடுத்து வைக்கனும்
பெண்ணுரிமைக்காக!


மாண்மை
வண்மை
நன்னேர்மை
பெண்மை
இவற்றை உணர்ந்த
ஆண்மை சிறப்பு!!
பெண்கள் சமமாய் வாழ
வாழ்த்தொன்று போதாதே!
அவர்களுக்கு குரல்கொடுத்தால்
ஆண்மை தாழ்ந்தொன்றும் போகாதே!
 
வணங்கத்தான் வானமிருக்கு
கும்பிடத்தான் சூரியனிருக்கு
அடங்கிப்போன உங்களை
அடக்கி வச்சதாருங்க!
ஆம்பளைக்கு நன்றி வேண்டாம்
அவனும் உங்க தோழர்தான்
அந்த எண்ணம் மாறவேண்டாம்!
நன்றி சொன்னால்
நட்பு பலப்படுங்க.
புதுவழி காணத்தான்
புரட்சி செய்யனும்
புறப்படுங்க!

ஏ​ழை மாணவனின் ஏற்றமிகு வாழ்வு!

ஆறு பேரு உள்ள
எங்க வீட்டுல நான்
மட்டும்தானே படிக்கிறபுள்ள!

இத்தனை நாளாக
எங்க ஊருல
பள்ளிக்கூடம் ஏதுமில்ல!

அப்பன்கிட்ட அடிவாங்கி
ஆத்தாகிட்ட வசைவாங்கி
அஞ்சாப்பு படிச்சுபுட்டேன்!
ஆறாப்பு படிக்கதான்
ஆறு மைல் போக வேணும்!
தனியாரு பஸ்ல போக
தினசரிதான் காசு வேணும்!

அரசாங்கம் ஏழையத்தான்
உசத்துமுன்னு சொன்னாங்க!
உண்மைதான் அது
உணர்ந்துபுட்டேன் நான் இப்போ
உச்சியிலே ஓடுற பஸ் மேல!

உணவகம்

முகநூலில் என் நண்பர் சரவணபவன் பற்றி ​வெளியிட்ட தகவலுக்கு நான் எழுதிய​வை!

விலைவாசி பற்றிய பேச்சே புளித்துப் போய் விட்டது -
இட்லி மாவைப் போல!

ஒரு முரண் கவிதை!
சரவணபவனின் இருக்கையில் ஒரு
சாமானியன் இருக்கையில் !!



அலைபேசி
விலைவாசி இரண்டுக்கும்
உட்படாமல் உருப்படியாய் யாரும்
உளரோ?!



இட்லி இரண்டு இருபத்தஞ்சு
மசாலா மறஞ்ச தோசை ஒன்னு நாற்பத்தஞ்சு
பேப்பர் போல தோசை ஒன்னு ஐம்பத்தஞ்சு
நூறு பருக்கை சோறு இங்கே 155
பலபேரு திங்கிறத பாத்துப்புட்டு!
பத்தாத வயித்தோட வந்தேன் நானும்
என் கையிலதான் இல்ல துட்டு!


ஏழையின் வயிறு
எதைப் போட்டாலும்
செரித்துவிடும்!
இன்றைய விலைவாசி
எவ்வளவு பணம் இருந்தாலும்
அரித்துவிடும்!

Wednesday, March 2, 2011

கல்ல​றை நிம்மதி

நீ வாழும்போது அறிஞனாயினும்
இங்கு வந்தபின்
நீ வாழ்வியல் அறிஞன்!


 கல்லறை
கல்வெட்டில்
ஜாதிப் பெயர்!
காக்காய்கள்
கரைகின்றன
...ஒரே மரத்தில்!

கல்லறையில் கூட
பார்க்கும்போதே
பரமஏழை தெரிகிறான்!


நீ வெளவாலாய்
தொங்கினாலும் அந்த
தலைகீழ் கல்லறை
தத்துவத்தை அறிய முடியாது!


உலகியல் கொடுமை கண்டு
உலகைவிட்டு பிரிந்த என்னை -
பேயென்னு சொல்லி மீண்டும்
பிறப்பெடுக்க வைக்காதீர்!

Tuesday, March 1, 2011

விதை இப்போ மரமாச்சு!


தன் மகன் குழந்தையாய் இருக்கும்போது போட்ட விதையில் முளைத்த மாமரத்தினடியில் அந்த தாய் உணவு உண்டு களைப்பாறும்போது,..........

மாமரமே உன்னை பாத்தா
மகனோட ஞாபகந்தான்!
சின்னதா விதை போட்டானே
சிறுபிள்​ளை அவனுந்தான்!

நீ மண்ணுல காலூனி
மானத்தை பாப்பதுபோல்
இந்த ஊர்ல பொறந்த எம்புள்ள
படிக்கறான் வெளி ஊர்ல!

நல்ல குணம் அவனுக்கு
உன் பச்ச இலைபோல!
அறிவும் பழுத்திருக்கு
உன்னோட மாம்பழம்போல!

உலகம் தெரிஞ்சிருக்கு
நான் பெத்த ஒத்தபுள்ள!
என் மனசு நெறஞ்சிருக்கு
காய்ச்ச இந்த மரம்போல!

வெய்யில்ல வேல பாத்து
பள்ளிக்கு நான் சேத்தேன்!
இத்தனை நாள் இருண்டாலும்
இப்ப என்வாழ்வு வெளிச்சமாச்சு!

சின்னதா விதைபோட்டு
நீயும் காத்திருந்தா!
பெருசா புகழ்சேரும்
காயத்துக்கு அருமருந்தா!

களைப்பா இருக்குன்னு
சாஞ்சேன் வேர்மேல!
நிம்மதிய நான் கண்டேன்
எம்புருசன் மார்போல!

Wednesday, February 16, 2011

நண்பர் கண்ட சிலை!


சிலையாய் ஒரு நிகரற்ற தாய்! - இந்த
சிலை இருக்கிறது நிகரற்றதாய்!


கணவரான முதல் குழந்தைக்காக
காதலோடு காத்திருக்கிறாள் - கையில்
ஒரு குழந்தையோடு!!

Tuesday, February 15, 2011

போட்டு தாக்கு!!


மனதை இரும்பாக்கு
பிரச்சனைகளை துரும்பாக்கு !!

பழமையை அறிவாக்கு
புதுமைக்கு உரமாக்கு!!

நற்கருத்தை விருந்தாக்கு
வெற்றியை நமதாக்கு!!

தோல்வியை தொலைநோக்கு
தன்னம்பிக்கை மருந்தாக்கு !!

மொத்தத்துல போட்டு தாக்கு!!

Wednesday, January 12, 2011

குழந்​தை ​தொழிலாளி


ஊருக்கு பாதை போட்டவன் தன்
வாழ்க்கை பாதை மாறியதை அறிவானோ!

-----  -----  -----  -----  -----  -----  -----  -----
வயசு எனக்கு பத்துதான்
வறுமை எங்கள் சொத்துதான்!
வாழ்க்கை இங்கே வாழத்தான்
மண் அள்ளி போட்டேனே - வாழ்க்கைல

-----  -----  -----  -----  -----  -----  -----  -----
வெட்டியாய் இருப்பதும் தவறுதான்! இப்படி
மண் வெட்டி​​யோடு இருப்பதும் தவறுதான்!

-----  -----  -----  -----  -----  -----  -----  -----  
கார்ட்டூன் பார்க்க வேண்டிய வயது!
தார்ரோடு போடுகிறது - விதி - வீதியில்

-----  -----  -----  -----  -----  -----  -----  -----
வெட்டியாய் இருக்க கூடாதென
மண் வெட்டி பிடித்தாய்!
வெட்டியாகும் வாழ்வு
என்பதை ஏன் மறந்தாய்!
வயிறு ஒட்டும்
வறுமையோ உன் தாய்!
உழைப்போடு கல்வியை கல!
அதனால் நன்மைகள் பல!

-----  -----  -----  -----  -----  -----  -----  -----

Wednesday, January 5, 2011

​போ​தை - தமிழகத்தின் பா​தை!

Facebook ல் நண்பன் இட்ட பதிவுக்கு என் க​மெண்ட்கள்

தமிழகத்தின்
தலைநகரில்
தமிழனின்
தன்னிகரற்ற நிலை! வாழ்க

--------  -------- --------  -------- --------  --------
பாருக்கு போனோரின் நிலையைப் பார்!
நீர் குடித்து நீரிலே விழுந்தாரோ!

--------  -------- --------  -------- --------  --------
தண்ணீர் உள்ளும் புறமும்!?!?!
--------  -------- --------  -------- --------  --------
போலி சரக்கு - வீதியில்
தூய தமிழன்

--------  -------- --------  -------- --------  --------
சாலை விதிப்படி பார்த்தால்
He is in Deadline!!

--------  -------- --------  -------- --------  --------
நிலை இல்லாத உடல்
நிழலோடு சேர்ந்ததோ - போதையா​லே!!

--------  -------- --------  -------- --------  --------
போதையில் பாதை மாறினால் தவறு!
பாதையில் விழுந்தால் என்ன!!
தினக்கூலி வருமானம்
ஒரு கோட்டருக்கு பெறுமானம்
இதிலேன்ன அவமானம்
அரசுக்கு மட்டும் வெகுமானம்!! 

Monday, January 3, 2011

A Career in A Carrier

Carrier ல் பயணிக்கும் குழந்தைக்கு - ஒரு
Life Career இருக்கிறது!!!
வேண்டாம் இந்த பயணம் -
வேண்டும் நாளும் கவனம்!