Tuesday, March 13, 2012

மங்கை இல்லா மாலை

பானை எனில் வெண்கலமோ
காதல் எனிலது பெண்களமோ?
கன்னியை கண்ட தருணம்
மனம் தடுமாறி கரணமோ?

மனதில் முதல் மழை வந்தபின்
மீண்டும் முதல் நிலை திரும்பாதே!
இனி இவ்வுலகமே உன்விரல்நுனி
வந்தாலும் உள்ளமும் விரும்பாதே!

பட்டுச் சேலையில் காணும்போது
விட்டுப் போக மனமுமேது காதலால்
கெட்டுப் போக விதியிருந்தாலும் விழி
சுட்டுச் சாக விதியிருந்தாலும்
கட்டாயம் என் மனம் ஏற்குமே...

மங்கை இல்லா மாலை
பூக்கள் இல்லா மாலை ஆகுமே....

No comments:

Post a Comment