Tuesday, March 13, 2012

பெண்மையை "பற்றி"

பெண்மை எங்குதானில்லை
தொடர்பற்று யாருமில்லையிங்கே.

பெண்மை பற்றி
சொல்லத்தான் நிறைய இருக்கிறது
யாவிடத்திலும் நிறைந்தே இருக்கிறது

பெண்மை பற்றி பாடுவோம்
பெண்மையை "பற்றி"யும் பாடுவோம்
காயம்படாமல்.

நம்
பிறப்புகள்
உணர்வுகள்
அணைப்புகள்
வளர்ப்புகள்
கவனிப்புகள்
தொல்லைகள்
எல்லைகள்
எல்லாம் பெண்மையே
உணரும் ஆண்மையே!

பெண்டிர்க்கு
தொல்லை என எண்ணாத தாயும்
வாதம் செய்து ஞானம் வளர்க்கும் தந்தையும்
கரம்கோர்த்து உதவும் தமையரும்
கனவுகள் அறியும் கணவரும்
சான்றோனாய் பிள்ளைகளும்
அமைய வாழ்த்துகிறேன் இன்று.
உணருவோம் பெண்மை நன்று
                                    -- சந்துரு

No comments:

Post a Comment