Sunday, April 17, 2011

தீயாய் நீ - உருகுவது நான்!




மெழுகுவர்த்தி
அணையும் வரை உருகுவது
தலைமேல் தீபம் சுமப்பது
தீயை தாங்கி தானே அழிவது!
                 ----------------
காதல்
அணைக்கும் வரை உருகுவது
உச்சிமுதல் பாதம் வரை
சுககுளிர்ச்சி தீயை வளர்பது!
தீயை தாங்கி தானே அழிவது!
                 ----------------
என் காதல் நிலாவின்
முகம் காட்டிய மெழுகுவர்த்தி!
                 ----------------
மென் கன்னத்தில் கைவைத்த
உன் காதல் கவலை முகத்தை
வெண் மெழுகு காட்டிக் கொடுத்ததோ!
                 ----------------  
மெழுகின் மேலிருக்கும்
நெருப்பு அசையாமல் எரிவதாய்
நினைக்கிறாய் நீ!
                
உண்மை அதுவல்ல
ஒளிவீசும் உன் முகத்தை
அசையாமல் பார்க்குது தீ!
                  ----------------
நினைவுத் தீயால்
நித்தம் நித்தம் உருகியதெல்லாம்
ஒன்றாகிப்போனது அருகில்
நீ வந்தபோது!
                  ----------------

பத்தாம் வகுப்பு
பரிச்சைக்கு பின்னே
பாவை உன்னை
பார்த்திருந்தாலே
பாசாகியிருப்பேனே!
                 ----------------
நீ என்னுள்
காதல் விளக்கேற்றி
அறிவொளியை
அணைத்தாயே!

உருகுது என்
வாழ்வும் நெஞ்சும்
நினைவுத் தீயை
நீதான் அணைத்தாயோ?
                  ----------------

No comments:

Post a Comment