தொலைக்காட்சியை ரசித்தவர்கள்
மழைக்காட்சியை ரசிப்பதால்
மின்தடை நன்றே...
பழங்களை அரைத்துக் குடித்தவர்கள்
மணத்தோடு உரித்து தின்பதால்
மின்தடை நன்றே...
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
மெத்தப்படித்தவன் என்று
நம்மவரும் பின்னாளில் பெருமை
பீத்தும் வாய்ப்பு கிடைப்பதால்
மின்தடை நன்றே...
குழந்தைக்கு அடிக்கடி பெற்றோரின்
தோள்கள் உறங்கக் கிடைப்பதால்
மின்தடை நன்றே...
இன்வெர்ட்டரில் மின்சாரம் சேமிப்பு.
எப்படியோ மக்களிடம்
சேமிக்கும் பழக்கம் மிகுவதால்
மின் தடை நன்றே...
பெண்கள் மெகா சீரியல் மறந்து
மெய்யான உலகை உணர்வதால்
மின்தடை நன்றே...
வீடியோகேமில் தனித்து மூழ்கி
உடல் பெருத்த குழந்தைகள்
வீதியில் கூடி விளையாடுவதால்
மின்தடை நன்றே...
மழைக்காட்சியை ரசிப்பதால்
மின்தடை நன்றே...
பழங்களை அரைத்துக் குடித்தவர்கள்
மணத்தோடு உரித்து தின்பதால்
மின்தடை நன்றே...
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
மெத்தப்படித்தவன் என்று
நம்மவரும் பின்னாளில் பெருமை
பீத்தும் வாய்ப்பு கிடைப்பதால்
மின்தடை நன்றே...
குழந்தைக்கு அடிக்கடி பெற்றோரின்
தோள்கள் உறங்கக் கிடைப்பதால்
மின்தடை நன்றே...
இன்வெர்ட்டரில் மின்சாரம் சேமிப்பு.
எப்படியோ மக்களிடம்
சேமிக்கும் பழக்கம் மிகுவதால்
மின் தடை நன்றே...
பெண்கள் மெகா சீரியல் மறந்து
மெய்யான உலகை உணர்வதால்
மின்தடை நன்றே...
வீடியோகேமில் தனித்து மூழ்கி
உடல் பெருத்த குழந்தைகள்
வீதியில் கூடி விளையாடுவதால்
மின்தடை நன்றே...
No comments:
Post a Comment