Thursday, June 14, 2012

என் செய்வேன்!

கத்தரி வெயிலில் என் 
கவிதை நதியும் காய்ந்ததே 
என் செய்வேன்!

அவள் என்னை கடக்கும்போது
ஆயிரம் கவிதைகள் முந்தியடிக்கும்
பேருந்தின் படியில் பிதுங்கும் கூட்டம் 
கண்டு விழிபிதுங்கி நிற்கையில் 
படிப்படியாய் கவிதைகள் நழுவுதே
என் செவ்வேன்!

தனிமையில் அமர்ந்து புத்தகம் விரித்து
உலகம் மறந்து உள்ளம் கலந்து
காதலின் ஆழத்தை என்மனம் தொடும்போது
"படிக்கிறியா" அன்னையின் குரலில்
அனைத்தும் நழுவுதே
என் செய்வேன்!

இவள்தான் வாழ்வின் முடிவென்ற பிறகு
இன்னொரு அழகு கண்ணில் பூத்தால்
அதுவா இதுவா என் மனம் அலைகையில்
இரண்டும் நழுவுதே!
என் செய்வேன்!

மின்தடை எப்போது என்ற நினைவே
என் கவிதைக்கு வேகத்தடையானதே
என் செய்வேன்!

---- Cheers Chandru

No comments:

Post a Comment